Last Updated : 22 Apr, 2019 11:26 AM

 

Published : 22 Apr 2019 11:26 AM
Last Updated : 22 Apr 2019 11:26 AM

பெரிய ஷாட்கள் அடிப்பது எளிது; டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆட வேண்டும்: தோனி அறிவுரை

பெரிய ஷாட்கள் அடிப்பது எளிதான விஷயம்தான், திட்டமிடுதலுடன் விளையாவது அவசியம். குறிப்பாக தொடக்க வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள், சிறப்பாக ஆடி நெருக்கடியை குறைக்க வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி அறிவுரை வழங்கினார்.

பெங்களூரில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 39-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் அவுட் ஆகினார் தாக்கூர். ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கல் சேர்த்தார் இதில்7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த போட்டியில் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் வாட்ஸன், ரெய்னா, அம்பதி ராயுடு, ஜாதவ் ஆகியோர் வீணாக விக்கெட்டை பறிகொடுத்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக பேட் செய்துவரும் வாட்ஸன் 10 போட்டிகளில் இதுவரை 147 ரன்களும், ராயுடு 10 போட்டிகளில்  192 ரன்களும், ரெய்னா 207 ரன்களும் சேர்த்துள்ளார். கேதார் ஜாதவ் மிகமோசமாக 10 ஆட்டங்களில் 145 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

9 போட்டிகளில் ஆடியுள்ள தோனி பெரும்பாலான ஆட்டங்களில் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 9 போட்டிகளில் தோனி 314 ரன்கள் சேர்த்து சராசரியாக 104 ரன்கள் வைத்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும்.

ஆக, அணியின் ஒட்டுமொத்த சுமையையும் தோனி களத்தில் இருந்தால், தோனி மட்டுமே சுமக்க வேண்டிய சூழல்தான் கடந்த போட்டிகளில் நடந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி நேற்றை தோனி பேசினார். அவர் பேசுகையில், " நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருந்தது. நான் எதிர்பார்த்த ரன்களுக்கு உள்ளாகவே பெங்களூரு அணியை சுருட்டி நெருக்கடி கொடுத்தோம், பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டோம்.

ஆனால், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, பல திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது. குறிப்பாக டாப்-ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல பேட்டிங்கையும், நிலைத்து ஆடும் போக்கையும் வளர்ததுக்கொள்ள வேண்டும்.

எதிரணியின் தாக்குதல் வியூகத்தை தெரிந்துகொண்டால், எவ்வாறு திட்டமிடலாம் என்பது குறித்த விஷயம் புலப்படும். ஆனால், தொடக்கத்திலேயே மிகப்பெரிய ஷாட்களை அடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அடித்து விக்கெட்டுகளை இழந்தால், நடுவரிசையில் களமிறங்குபவர்களுக்குத்தான் அழுத்தம், நெருக்கடி அதிகரிக்கும். மிகப்பெரிய ஷாட்கள் அடிப்பது எளிது, விக்கெட்டுகளை இழப்புதும் எளிது அதோது நமது வேலைமுடித்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. திட்டமிட்டு ஷாட்களை ஆடுவது அவசியம்.

அதேசமயம் களத்தில் நின்று தேவைக்கு ஏற்றார்போல் பெரிய ஷாட்களை ஆடாமல் இருப்பதும், அடுத்து களமிறங்குவோருக்கு அழுத்தத்தை கொடுக்கும். ஒருபேட்ஸ்மேன் களத்தில் இறங்கியவுடன் கணித்து செயல்பட வேண்டும். அதனால்தான் டாப்-ஆர்டர்களை பினிஷர்களாக இருக்க முடியும். சில நிமிடங்களில் ஆட்டமிழக்க அவர்கள் களமிறக்கவில்லை.

நடுவரிசையில் களமிறங்குபவர்களுக்கு அனைத்து சூழலையும் கணித்து களமிறங்குகிறார்கள். 5, 6 அல்லது 7-ம் இடத்தில் களமிறங்கும்போது, என்னதான் கணக்கீடு செய்தாலும் அதை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் ஏனென்றால், மேற்கொண்டு ஒருவிக்கெட்டை இழந்தாலும் போட்டி முடியும் கட்டத்துக்கு சென்றுவிடும்.

நான் இன்று ஏராளமான பந்துகளைச் சந்தித்து விளையாடினேன், அதிகமான ரன்கள் தேவைப்பட்டதால், நான் துணிந்து ஷாட்களை ஆடுவதற்கு தயாராகினேன். 12 பந்துகளில் ஏறக்குறைய 36 முதல் 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதிகமான பவுண்டரிகளும், சிக்ஸர்களும் தேவைப்பட்டன. அதனால்தான் சில பந்துகளுக்கு நான் ஸ்ட்ரைக்கிங்கை நானே எடுத்துக்கொண்டு ரன்கள் ஓடவில்லை

ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சின்னசாமி மைதானம் இல்லை, பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது, அதிகமாகபந்துகள் பவுண்ஸ் ஆகின.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x