Published : 21 Apr 2019 02:02 PM
Last Updated : 21 Apr 2019 02:02 PM

புறப்பட்டார் ஜோஸ் பட்லர்: ராஜஸ்தான் அணிக்கு கடும் பின்னடைவு

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஜோஸ் பட்லர் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார்.

ஐபிஎல் சீசனில் அடுத்து வரும் போட்டிகளில் ஜோஸ்பட்லர் விளையாடமாட்டார் எனும் செய்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.

12-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 6 தோல்விகளுடன் இருக்கிறது.

ரஹானே கேப்டன்ஷிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் ரஹானேவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அந்த பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் வழங்கப்பட்டது. கேப்டன் பதவி வந்ததுமே சிறப்பாக ஆடிய ஸ்மித் 59 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டத்தில் பலமாக விளங்கியவர், பல்வேறு தருணங்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை பெற்றவர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். இந்த சீசனில் 151 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பட்லர், இதுவரை 315 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஜோஸ் பட்லரின் மனைவிக்கு விரைவில் பிரசவம் நடக்க இருப்பதால், தான் மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதால், ஜோஸ் பட்லர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஆதலால், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து இந்த சீசனுக்கு விளையாட முடியாத சூழலில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் ஜோஸ்பட்லர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுவரை செல்வற்கு ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் முக்கியக் காரணமாகும். ஆனால், இந்த முறை விரைவாகவே ஐபிஎல் சீசனில் இருக்கு பட்லர் வெளியேறியுள்ளார்,

இந்த மாத இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தும்,  ஸ்டீவ் ஸ்மித்தும் ஆஸ்திரேலியா புறப்பட்டுவிடுவார்கள். ஏற்கனவே ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்லுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், பட்லர் இல்லாத நிலை மேலும் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாகும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x