Last Updated : 21 Apr, 2019 12:26 PM

 

Published : 21 Apr 2019 12:26 PM
Last Updated : 21 Apr 2019 12:26 PM

திருந்தாத அஸ்வின்: ஐபிஎல் அபராதம்; மன்கட் அவுட்டை நடனமாடி கிண்டல் செய்த ஷிகர் தவண்

ஐபிஎல் போட்டியில் மன்கட் அவுட் மன்னன் என்றழைக்கப்படும் அஸ்வின் ரவிச்சந்திரன் நேற்றை ஆட்டத்தில் மன்கட் அவுட் செய்ய முயற்சிக்க அவரை ஷிகர் தவண் தனக்கே உரிய நடனமாடி கிண்டல் செய்தார்.

அது மட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டற்காக அஸ்வினுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.

கிரிக்கெட் போட்டியில் ஐசிசி விதிமுறைகளின்படி மன்கட் அவுட் செய்யும் முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், மன்கட் அவுட் செய்யும் முன் பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை எச்சரித்து செய்ய வேண்டும் என்பது ஸ்பிரிட் ஆப் த கிரிக்கெட்டாகும்.

ஆனால், இந்த ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டை மீறி இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜோஸ் பட்லரை எச்சரிக்காமல் மன்கட் அவுட் செய்த அஸ்வினின் செயல் விதிகளின்படி சரியென்றாலும், தார்மீக அடிப்படையில் தவறாக  பார்க்கப்படுகிறது.

ஆனால், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் வீரர் குர்னல் பாண்டியாவுக்கு இதேபோன்ற மன்கட் அவுட் செய்ய வாய்ப்பு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கிடைத்தது. ஆனால், அப்போது பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வாலை எச்சரித்து அனுப்பினார் குர்னல் பாண்டியா. இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனால், இந்த ஐபிஎல் சீசனில் மன்கவுட் முறை என்பது அஸ்வின் மீது பெரும் விமர்சனங்களையும் ஃபேர் கிரிக்கெட் அணி என்பதிலும் மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.

இதைபோன்ற மன்கட் அவுட் சம்பவத்தையும் நேற்று அரங்கேற்ற அஸ்வின் முயன்றார், ஆனால், கப்பார் சிங்  ஷிகர் தவண் அதை முறியடித்து நடனமாடி அஸ்வினை கிண்டல் செய்தார்.

டெல்லியில் நேற்று ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

இந்த போட்டியின் 13-வது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது ஸ்டிரைக்கர் முனையில் ஸ்ரேயாஸ் அய்யர் இருந்தால், நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் ஷிகர் தவண் இருந்தார்.

அஸ்வின் 2-வது பந்தை வீசவந்து திடீரென கிரீஸ்க்குள் வந்ததும் நின்றுவி்ட்டு, ஷிகர் தவணைப் பார்த்தார். ஆனால், ஷிகர் தவண் கிரீஸுக்குள் தனது பேட்டை வைத்துதான் நின்றிருந்தார். இதைப் பார்த்த அஸ்வின் அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது தவண், காலை மடக்கி கிரீஸுக்குள் வைத்து கிண்டல் செய்தார்.

மீண்டும் அஸ்வின் 2-வது பந்தை வீசியபோது ஷிகர் தவண் பேட்டை கிரீஸுக்குள் வைத்தவாறு, தனது இடுப்புப்பகுதியை மட்டும் அசைத்து நடனமாடி அஸ்வினையும், மன்கட் அவுட்டையும் கிண்டல் செய்தார். இதைப்பார்த்த நடுவரும் சிரிக்கத்த தொடங்கினார். இந்த வீடியோவை ஐபிஎல் அமைப்பு தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது ஏராளமானோர் இதை பகிரந்து வருகின்றனர்.

மன்கட் அவுட் என்பது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்று தெரிந்திருக்கும் தொடர்ந்து அஸ்வின் முயற்சிப்பத ரசிரகர்கள் ஒருதரப்பினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.

ரூ.12 லட்சம் அபராதம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பந்துவீசு வதற்கு அஸ்வின் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். இதனால், போட்டி ஊதியத்தில் இருந்து  ரூ.12 லட்சம் அபராதம் விதிக்க ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதேபோல் ஏற்கனவே பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கயே ரஹானே ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x