Published : 07 Apr 2019 01:26 PM
Last Updated : 07 Apr 2019 01:26 PM

‘இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்.. இல்லையேல் பெட்டிப் படுக்கையுடன் புறப்படு’; ஐபிஎல் ஒரு ‘கட் த்ரோட்’: பிராட் ஹாட்ஜ் பரபரப்பு

ஐபிஎல் டி20 போட்டிகள் கிரிக்கெட் என்பதையும் தாண்டிய வர்த்தகப் போட்டிக் களமாக மாறியுள்ளது, வீரர்கள், அணிகள் எல்லாம் ‘பிராண்ட்’. இந்த பிராண்ட் கட்டமைப்புதான் ஐபிஎல் கிரிக்கெட் என்று தற்போது மாறியுள்ளது.  இதனால்தான் நிறைய ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன.

 

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது அணி உரிமையாளர்கள் வர்த்தகப் போட்டி மனப்பான்மையுடன் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் அவர்களிடத்தில் ஒரு ‘கட் த்ரோட்’ கல்ச்சர் பரவி வருவதாக என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் ஐபிஎல் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான பிராட் ஹாட்ஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

 

அதாவது இறுதிப்போட்டிக்கு அணியை கொண்டு செல் இல்லையேல் பெட்டிப்படுக்கையுடன் கிளம்பு என்பதாகவே ஐபிஎல் கட் த்ரோட் அணுகுமுறை உள்ளது.

 

2016-18-ல் அவர் குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் கோச்சாக இருந்தார்.  3 அணிகளுக்கு பிராட் ஹாட்ஜ் ஆடியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக 2018-ல் கோச்சாக இருந்தார். முதல் 6 போட்டியில் 5 வெற்றி என்ற நிலையிலிருந்து கிங்ஸ் லெவன் தொடரில் 7ம் இடத்திற்குச் சரிந்தது. அதன் பிறகே கிங்ஸ் லெவன் அணியுடனான இவரது உறவு முறிந்த்து, தற்போது கரீபியன் பிரிமியர் லீகின் செயிண்ட் லூசியா ஸ்டார்ஸின் பயிற்சியாளராக இருக்கிறார்.

 

இவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் ‘கட் த்ரோட்’ பண்பாடு பற்றி பரபரப்பாக கூறியுள்ளார், இந்த முழுநீள போட்டியின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளர்களிடம் கடுமை காட்டப்படுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லையா, பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு மூட்டையைக் கட்டு, வெளியே போ என்ற நிலைதான் உள்ளது.

 

ஆம். இங்கு உண்மையில் ‘கட் த்ரோட்’ தான்.  நான் கிங்ஸ் லெவன் உரிமையாளர்களிடம் கேட்டேன், வெற்றியை எப்படி மதிபீடு செய்கிறீர்கள்? உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்.  10 ஆண்டுகளாக நீங்கள் வெல்லவில்லை. நானும் வெற்றி பெற முடியவில்லை எனில் என்னை எப்படி விளங்கிக்கொள்வீர்கள்? என்று கேட்டேன்.

 

மேலும் 10 ஆண்டுகளில் எவ்வளவு முறை ஐபிஎல் சாம்பின் ஆக முடியும் என்று நினைக்கிறீர்கள்? 3 முறை என்பது எதார்த்தமாக உள்ளது, மும்பை இந்தியன்ஸ் 3 முறை வென்றுள்ளது, சிஎஸ்கே 3 முறை வென்றுள்ளது, 10 ஆண்டுகளில் அந்த அணிகள் 3 முறை வென்றுள்ளன.  10 ஆண்டுகள் வெற்றியாக இதைக் கூற முடியும் என்று கிங்ஸ் லெவனுக்குப் புரிய வைத்தேன்” என்றார் பிராட் ஹாட்ஜ்

 

விரேந்திர சேவாகும் இத்தகைய ஒரு சூழலில்தான் கிங்ஸ் லெவன் பணியை விட்டு விலகியுள்ளார் போலும்... கடும் நெருக்கடி கொடுக்கப்படும் என்று தெரிகிறது, அஸ்வின் ஏன் ‘மன்கட்’ முறையில் ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்ய முடிவெடுத்தார் என்பதும் பிராட் ஹாட்ஜ் கூறும் பின்னணியில் வைத்துப் பார்க்கத்தக்கதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x