Published : 29 Mar 2019 05:09 PM
Last Updated : 29 Mar 2019 05:09 PM

மேல் சட்டையின்றி கேதார் ஜாதவ்...: பிறந்தநாள் கொண்டாடிய சிஎஸ்கே அணி: தள்ளிநின்று ரசித்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் கேதர் ஜாதவின் பிறந்தநாளை உறசாகமாகவும், மகிழ்ச்சியுடனும் வீரர்கள் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 12-வது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி டெல்லி அணியையும், பெங்களூரு அணியையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த 26-ம் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அன்றைய தினம் சிஎஸ்கே அணி வீரர் கேதார் ஜாதவின் 34-வது பிறந்தநாளாகும். தங்களின் ஓய்வு அறைக்கு வந்த சிஎஸ்கே வீரர்கள், கேதார் ஜாதவின் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடி உள்ளனர்.

கேதார் ஜாதவை மேலாடையின்றி நிற்கவைத்து, கேக்கை பூசி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இவை அனைத்தையும் கேப்டன் தோனி, தூரத்தில் இருந்தவாரே பார்த்தரசித்துள்ளார். இந்த கொண்டாட்டம் முடிந்தவுடன், கடைசியில் ஜாதவ் அருகே  சென்று தோனி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த விடியோவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x