Published : 29 Mar 2019 04:40 PM
Last Updated : 29 Mar 2019 04:40 PM

சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை: 10 கோல்கள் திணித்து போலந்தை நொறுக்கிய இந்தியா

மலேசியாவின் இபோவில் நடைபெறும் ஹாக்கி உலகின் மதிப்புமிக்க தொடரான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் கடைசி லீக் போட்டியில் போலந்து அணியை இந்திய அணி 10-0 என்று அபார வெற்றி பெற்றது.

 

இதன் மூலம் தொடரில் தோல்வியடையாமல் ஆடிவரும் இந்திய அணி 5 போட்டிகளில் 13 புள்ளிகள் பெற்றுள்ளது.  மந்தீப் சிங் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து இந்தத் தொடரில் தன் கோல் கணக்கை 7 ஆக உயர்த்திக் கொண்டார்.

 

சனிக்கிழமையன்று கொரியாவுடனான இறுதிப்போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்ற இந்திய அணி இந்தத் தொடரில் கோல் மழையைப் பொழிந்தது.

 

2வது பாதியில் இந்திய அணி 4 கோல்களை அடித்தது. ஆஃப் டைமின் போது இந்திய அணி 6-0 என்று முன்னிலை பெற்றது. அடுத்த 30 நிமிடங்களில் மேலும் 4 கோல்களைத் திணித்து போலந்தைத் திக்குமுக்காடச் செய்தது.

 

மந்தீப் சிங் 2 கோல்களை அடித்து தன் அபாரமான பார்மைத் தொடர்ந்தார், கனடாவுக்கு எதிராக புதனன்று நடைபெற்ற ஆட்டத்தில் 7-3 என்று இந்தியா வென்ற போது மந்தீப் சிங் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

 

விவேக் பிரசாத் (1வது நிமிடம்), சுமித் குமார் (7வது நிமிடம்), வருண் குமார் (18, 25), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜீத் சிங் (29), நீலகண்ட ஷர்மா (36), அமித் ரோஹித் தாஸ் (

55) ஆகியோர் கோல்களை அடிக்க 50 மற்றும் 51வது நிமிடத்தில் அபார மந்தீப் சிங் 2 கோல்களை அடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x