Last Updated : 26 Mar, 2019 04:29 PM

 

Published : 26 Mar 2019 04:29 PM
Last Updated : 26 Mar 2019 04:29 PM

அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்: பிசிசிஐ அறிவுறுத்தல்

ஐபிஎல் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.

இந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதுவர் ஷேன் வார்ன் கடுமையாக விமர்சித்துள்ளார், அந்த அணியின் பயிற்சியாளர் அப்டனும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த அதிகாரி ஒருவர் அளித்தபோட்டியில், " கிரிக்கெட் மைதானத்தில், பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய கிரிக்கெட் திறமைகளையும், திறன்களையும்தான் பந்துவீச்சாளர் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தி விளையாடினால்தான், போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சரியான செய்தி சென்று சேரும்.

போட்டியை நடத்தும் அதிகாரிகள் தங்களின் பணியைச் செய்ய  தவறிவிட்டனர், அந்த சூழலை கையாள்வதிலும் தோல்வி அடைந்துவிட்டனர். அந்தசூழலில் ஐசிசி விதிகள்படி நடுவர் தீர்ப்பளித்ததால், பட்லரும் தன்னை சூழலுக்குஏற்ப மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆதலால், அஸ்வின் விதிகளையும், விளையாட்டின் ஸ்பிரிட்டையும் கண்டிப்பாக புரிந்து கொண்டு இருவிஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம், ஆனால், தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக் கூடாது. ஒருபேட்ஸ்மேன் கிரீஸை விட்டு விலகி முன்னுரிமை எடுத்தால், அதை ஜென்டில்மேன்போல் சரியான வழயில் அணுக வேண்டும். போட்டி என்பது நல்லபடியாக இருக்க வேண்டும், போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ அமைப்பின் மற்றொரு அதிகாரி கூறுகையில், " அஸ்வினின் இந்த செயல்பாடு, மன்கட் அவுட் முறை தனிப்பட்ட நபரின் புகழைக் கெடுத்துவிடும், விமர்சனங்கள் அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிடும்.

இதுபோன்று ஆட்டமிழக்கச் செய்வது முதுகில் குத்துவது போன்றதாகும். அதனால்தான் இந்த முறையை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்த முறையால் உடனடியாக முடிவு கிடைக்கும். ஆனால், உறுதியாக பிரபலமடையும் இந்த போட்டியில் ஒருபோதும் வெல்ல முடியாது.

அதேசமயம்,இரு தவறுகளை சரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒன்று,  பட்லர் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் அங்கிருந்து உடனடியாக சென்று இருக்க வேண்டும். இரண்டாவது,  போட்டி முடிந்தபின் அஸ்வினுடன் கைகுலுக்காமல் பட்லர் சென்றதையும் தவிர்த்திருக்க வேண்டும். இது சரியான அணுகுமுறை அல்ல.

அஸ்வினுடன் கைகுலுக்காமல் ஜோஸ் பட்லர் சென்றதும் விளையாட்டின் ஸ்பிரிட்டுக்கு எதிரானதுதான். இருவிஷயங்களையும் மன்னிக்க முடியாது " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x