Last Updated : 26 Mar, 2019 03:39 PM

 

Published : 26 Mar 2019 03:39 PM
Last Updated : 26 Mar 2019 03:39 PM

ரத்து செய்யப்படுமா?-தோனியும், கோலியும், ஐபிஎல் போட்டியில் மன்கட் அவுட் முறையை எதிர்க்கிறார்கள்: ராஜீவ் சுக்லா கருத்து

ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் நான்-ஸ்டிரைக்கரை ஆட்டமிழக்கச் செய்யும் முறையை சிஎஸ்கே கேப்டன் தோனியும், ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியும் எதிர்த்தார்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.

இந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதுவர் ஷேன் வார்ன் கடுமையாக விமர்சித்துள்ளார், அந்த அணியின் பயிற்சியாளர் அப்டனும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா , மன்கட் அவுட் முறை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " ஐபிஎல் போட்டிகளில் மன்கட் முறையில் நான்-ஸ்டிரைக்கரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யும் முறையை தவிர்க்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அணியின் கேப்டன்கள், போட்டி நடுவர்கள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில்  பங்கேற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஆகியோர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

அந்த ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது என்று நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் அந்த கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன், கூட்டத்தின் முடிவில் நான்-ஸ்டிரைக்கர் கிரீஸுக்கு வெளியே இருக்கும் போது மன்கட் அவுட் முறையில் பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்ய கூடாது. இதை தார்மீக ரீதியில் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது " எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் கூட்டத்தில் மன்கட் அவுட் முறை கடைபிடிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்வின் செயலுக்கு பிசிசிஐ நிர்வாகமும் கண்டித்துள்ளது. போட்டி நடுவர் மன்கட் முறை குறித்து ஆலோசித்து வருகிறார். ஆதலால்,ஐபிஎல் முறையில் மன்கட் முறை கடைபிடிக்கப்படுமா, ரத்தாகுமா என்பது விரைவில் தெரியும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x