Published : 23 Mar 2019 10:45 PM
Last Updated : 23 Mar 2019 10:45 PM

ஐபிஎல் போட்டியில் வரலாறு படைத்த ரெய்னா: புதிய சாதனை

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் அடையாத முதல் மைல்கல்லை ரெய்னா எட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், முதல் 7 இடங்களிலுமே நமது இந்திய வீரர்கள் தான் இருக்கின்றனர். அதில் முதல் இடத்தில் ரெய்னாவும், இரண்டாவது இடத்தில் விராட் கோலியும், மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த வீரரும் 5000 ரன்களை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் 12-வது ஐபிஎல் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.  சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 71 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதில் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் ரெய்னா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 15 ரன்களை எட்டியபோது, ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். இதுவரை ஐபிஎல் போட்டியில் ரெய்னா ஒரு சதம் 35 அரைசதம் அடித்துள்ளார். இதற்கு முன் எந்த நாட்டு வீரரும் இந்த சாதனையைச் செய்யவில்லை

2-வது இடத்தில் விராட் கோலி 4948 ரன்களுடனும், 3-வது இடத்தில் ரோஹித் சர்மா 4,493 ரன்களுடன் உள்ளனர் இவர்கள் இருவரும் இந்த சீசனில் 5 ஆயிரம் ரன்களை கடந்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம். சிஎஸ்கே கேப்டன் தோனி 4,016 ரன்களும், டேவிட் வார்னர் 4014 ரன்களுடன், உத்தப்பா 4086, ஷிகர் தவண் 4,058 ரன்களுடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x