Published : 22 Mar 2019 06:13 PM
Last Updated : 22 Mar 2019 06:13 PM

ஐபிஎல் 2019: தோனியும் கோலியும் ஒருவருக்கு எதிராக ஒருவர் வைத்திருக்கும் அரிய பேட்டிங் சாதனை- சுவாரஸ்யத் தகவல்

சனிக்கிழமை (23-3-19) அன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன, முதல் போட்டியே கலக்கலான முந்தைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டமே பார்க்காத ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

 

சேப்பாக்கத்தில் நாளை தொடக்க விழாவுடன் ஐபிஎல் திருவிழா பெரிய அளவில் தொடங்குகிறது. சென்னை ரசிகர்கள் கடந்த முறை தங்கள் ‘தல’ ஆட்டத்தை நேரில் பார்க்க முடியவில்லை. ஆகவே இந்த முறை ஸ்டேடியத்தில் தோனி தோனி என்ற சப்தம் காதைப்பிளக்கும் என்று நம்பலாம்.

 

2014 முதல் ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸை வென்றதில்லை, அதே போல் சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி 6 போட்டிகளில் தோல்வியடைந்தது.

 

இதில் தோனி, கோலி இருவரும் பரஸ்பரம் இரு அணிகளுக்கும் எதிராக வைத்திருக்கும் ஒரு சாதனை அரிதானது, தனித்துவமானதாகும்.

 

அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் விராட் கோலி. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டுமே 732 ரன்களை விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் விராட் கோலிதான்.

 

அதிலும் 12 முறை 30-ம் அதற்கும் கூடுதலான ரன்களை சிஎஸ்கேவுக்கு எதிராக எடுத்துள்ளார் விராட் கோலி, இதுவும் சிஎஸ்கேவுக்கு எதிராக ஒரு வீரர் எடுக்கும் அதிகபட்ச 30+ ஸ்கோர் எண்ணிக்கையாகும்.

 

அதே போல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோனி 710 ரன்களை எடுத்து இந்த அணிக்கு எதிராக முதலிடத்தில் இருக்கிறார்.

 

இருவரும் ஒவருக்கு எதிராக ஒருவர் சளைத்தவர்களல்லர் என்பதற்கு இந்த புள்ளி விவரம் ஓர் உதாரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x