Published : 22 Mar 2019 09:24 AM
Last Updated : 22 Mar 2019 09:24 AM

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் போட்டி வரலாற்றில் 2008, 2014-ம் ஆண்டு போட்டிகளைத் தவிர இதுவரை குறிப்பிடத்தகுந்த சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செய்யவில்லை. 2008-ல் அரை இறுதி வரையும், 2014-ல் 2-ம் இடத்தையும் பஞ்சாப் பிடித்தது. மற்ற ஆண்டு போட்டிகள் அனைத்திலும் லீக் சுற்றிலேயே பஞ்சாப் அணி வெளியேறியது. 2018-ல் 8-வது இடத்தைப் பிடித்து விமர்சனத்துக்கு உள்ளானது. கடந்த ஆண்டில் கே.எல்.ராகுல், ஆண்ட்ரூ டை ஆகியோர் மட்டுமே சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். மற்றவர்கள் சோபிக்காததால் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

அணி வீரர்கள்

மொத்தம் 23

இந்திய வீரர்கள் 15

வெளிநாட்டு வீரர்கள் 8

தொடக்க வீரர்கள்: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல்

நடுவரிசை வீரர்கள்: கருண் நாயர், டேவிட் மில்லர், மன்தீப் சிங், சர்பிராஸ் கான்

விக்கெட் கீப்பர்கள்: பிரப்சிம்ரன் சிங், நிக்கோலஸ் பூரன்

ஆல்ரவுண்டர்கள்: அக்னிவேஷ் அயாச்சி, வருண் சக்கரவர்த்தி, ஹர்பீரித் பிரார், மோய்சஸ் ஹென்றிக்ஸ், சாம் கர்ரன்.

ரிஸ்ட் ஸ்பின்னர்கள்: முஜிப் உர் ரஹ்மான், எம்.அஸ்வின்

விரல் ஸ்பின்னர்: ஆர். அஸ்வின்

வேகப்பந்து வீச்சாளர்கள்:அங்கித் ராஜ்புத், ஆண்ட்ரூ டை,  அர்ஷ்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜோயன், மொகமது ஷமி.

பலம்

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலம். இடது-வலது கூட்டணியில் இந்த ஜோடி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தும். இவர்களுக்கு பந்துவீசுவது எதிரணி வீரர்களுக்கு மிகவும் சிரமம். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய கெய்ல், ஐபிஎல் தொடரிலும் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார். இங்கிலாந்து தொடரில் அவர் 5 இன்னிங்ஸ்களில் 424 ரன்கள் குவித்தார். இதேபோல ராகுலின் ஆட்டமும் அணிக்கு கூடுதல் பலம்.

முஜிப் உர் ரஹ்மான், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக சிறப்பாக பந்துவீசினார். அவரது ரிஸ்ட் ஸ்பின் அணிக்கு நிச்சயம் கூடுதல் பலமளிக்கக்கூடியது. ஆர்.அஸ்வின், எம்.அஸ்வின், ஆண்ட்ரூ டை ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர்.

பலவீனம்

அணியின் பலவீன மாக இருப்பது வேகப்பந்துவீச்சுதான். இந்த அணியில் ஆண்ட்ரூ டை, மொகமது ஷமியைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவக் குறைவு இருப்பது பலவீனமே.

அங்கித் ராஜ்புத், அர்ஷ்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜோயன் ஆகியோர் குறைந்த அனுபவம் உடையவர்கள். அவர்களது பந்துவீச்சு இந்த சீசனில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

மாற்றங்கள்

அணியில் புதிதாக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் இணைந்துள்ளார். இவரை அணி நிரவாகம் ரூ.7.2 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மோய்சஸ் ஹென்றிக்ஸ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளனர்.

இதுவரை

2008 அரை இறுதி

2009 லீக் சுற்று

2010 லீக் சுற்று

2011 லீக் சுற்று

2012 லீக் சுற்று

2013 லீக் சுற்று

2014 2-ம் இடம்

2015 லீக் சுற்று

2016 லீக் சுற்று

2017 லீக் சுற்று

2018 லீக் சுற்று

கிறிஸ் கெய்ல்: அணியின் முதல் நட்சத்திர வீரராக கிறிஸ் கெயில் உள்ளார். டி20 போட்டிகளின் முடிசூடா மன்னன் என்று வர்ணிக்கக்கூடிய கெயில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பல நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்று அந்த அணிக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் முதன்முதலாக 10,000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

ரன்கள்: 3,994

சராசரி: 31.17

முஜிப் உர் ரஹ்மான்: 17 வயதாகும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான், ரிஸ்ட் ஸ்பின்னர்களில் முக்கியமானவர். கடந்த சீசனில் சிறப்பாக பரிமளித்தார். அதிரடியாகவும் ஆடக் கூடியவர். இவரது லெக் ஸ்பின் பந்துகள், கூக்ளி பந்துகள் எதிரணி வீரர்களை மிரட்டக்கூடியவை.

ரன்கள்: 289 ஸ்டிரைக் ரேட் 17.71

விக்கெட்கள் 36, சராசரி 7.64

மன்தீப் சிங்: பஞ்சாப் ரஞ்சி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் மன்தீப் சிங், அதிரடியாக விளையாடக் கூடியவர். நீண்ட காலமாக பெங்களூர் அணிக்காக விளையாடி தற்போது பஞ்சாப் அணிக்கு வந்துள்ளார்.

ரன்கள் 1,364

சராசரி 20.98.

கே.எல்.ராகுல்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மிகச் சிறந்த வீரராக ஆண்ட்ரூ டை இருந்தாலும், அணியின் துருப்புச் சீட்டாக கே.எல்.ராகுல் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் ஆட்டங்களிலும், தேசிய அணிக்காக ஆடிய ஆட்டங்களிலும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். உள்ளூர் ஆடுகளங்கள் அவருக்கு மிகப் பரிச்சயம் என்பது அவரது பிளஸ் பாயிண்ட். ஆனால் கடந்த சில போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியபோது அவரது பேட்டிங் எடுபடவில்லை. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் துணையுடன் இம்முறை முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 659 ரன்கள் குவித்தார்.

ரன்கள்: 1,384

சராசரி 38.44.

ஆண்ட்ரூ டை: 16 வயதில் டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நம்பிக்கை வீரர் ஆண்ட்ரூ டை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அபாரமான பந்துவீச்சாளராகவும் உள்ளார். இவரது யார்க்கர்கள், எந்தவொரு பேட்ஸ்மேனையும் நிலைகுலையச் செய்பவை. கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறமை பெற்றவர்.

ரன்கள்: 589 ஸ்டிரைக் ரேட்: 12.83

விக்கெட்கள்: 36 சராசரி: 7.64

ஆர்.அஸ்வின்: நீண்டகாலமாக சென்னை அணியில் விளையாடி 2018-ல் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக களமிறங்கினார். சென்னை அணிக்காக விளையாடியபோது தனது திறமையான பந்துவீச்சால் பல போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆனால் பஞ்சாப் அணிக்கு போதுமான வெற்றிகளை அஸ்வினால் பெற முடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் இவரும் ஒருவர்

விக்கெட்கள் 110. சராசரி 6.73.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x