Published : 18 Mar 2019 06:25 PM
Last Updated : 18 Mar 2019 06:25 PM

உ.கோப்பைக்கு என்னை இருமுறை பரிசீலிக்க வேண்டி வரும்- ஷ்ரேயஸ் அய்யர்; தோனி... தோனி.. வழிபடும் சென்னை: ஐபிஎல் துளிகள்

உலகின் மிகப்பெரிய தனியார் டி20 கிரிக்கெட் தொடரான ஐபில் திருவிழா மார்ச் 23ம் தேதி ஆர்சிபி, சிஎஸ்கே என்று தோனி, கோலி மோதல் என்ற பெருவெடிப்புடன் தொடங்குகிறது.

 

சென்னை ரசிகர்கள் உற்சாகம்...பெருகும் தோனி வழிபாடு

 

நீண்ட காலத்துக்குப் பிறகு தங்கள் மண்ணில் தங்கள் ஹீரோவைப் பார்க்கும் ‘மஞ்சள் ஆர்மி’ படையினர் தோனியைத் ‘தரிசனம்’ செய்ய ஆர்வத்துடன் காத்திருந்து தற்போது அவர் பயிற்சிக்கு வரும்போதே ‘ரகளை’ காட்டினர்.

 

இது போட்டி கூட அல்ல பயிற்சிதான் ஆனால் அதற்கே போட்டி போல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி மைதானம் முழுதும் தோனி... தோனி என்று காட்டுக்கூச்சல் போட்டனர் ரசிகர்கள்.

 

சிஎஸ்கே ட்விட்டரில்  ‘விசில் பறக்கும் பாரு... தல பராக் விசில் போடு எல்லோவ்’ என்று கூப்பாடு போடத் தொடங்கிவிட்டது.

 

பயிற்சி ஆட்டத்துக்கே இப்படி என்றால்... முதல் போட்டி அன்று எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா? தாங்கலடா சாமி இந்த தோனி கும்பலின் ஆர்பாட்டம் என்று உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்...

 

ஐபிஎல்-ல மட்டும் சிறப்பா ஆடிட்டேன்னா... : ஷ்ரேயஸ் அய்யர் குஷி

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், ஐபிஎல் போட்டிகளை உலகக்கோப்பை அணித்தேர்வுக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறார்.

 

“எல்லா பார்மேட்டுகளிலும் நன்றாக ஆடுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் நன்றாக ஆடிவிட்டால் உலகக்கோப்பைக்கு என்னைத் தேர்வு செய்ய அவர்கள் இருமுறை பரிசீலிக்க வேண்டும்” என்கிறார்... ‘ஏற்கெனவே லெவன், டுவெல்வ், ஃபிப்டீன் வரைக்கும் முடிவு செய்தாகிவிட்டதே அய்யர்...’ என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

 

முதல் போட்டியிலிருந்தே ஸ்மித், வார்னர் விளையாடலாம்...

பந்தை உப்புக்காகிதம் வைத்துத் தேய்த்து விட்டு தற்போது பெஞ்சு தேய்த்துக் கொண்டிருக்கும் ஆஸி. வீரர்க்ள் ஸ்மித், வார்னர் முதல் போட்டியிலிருந்தே விளையாட வாய்ப்புள்ளது என்று சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகங்கள் கிசுகிசுக்கின்றன. மறுபடியும் பந்தை அவங்க கண்ல காட்டாதீங்க என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x