Published : 17 Mar 2019 05:28 PM
Last Updated : 17 Mar 2019 05:28 PM

தொடர் தொடங்குவதற்கு முன்பே  ‘நாங்கதான் ‘கப்’ வாங்குவோம்னு சொல்லாதீங்க’: ஆர்சிபி கேப்டன் விராட் விளாசல்

ஆர்சிபி அணி இது வரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற கேள்வி கேப்டன் விராட் கோலியை துரத்தி வருகிறது, அவரை அழுத்துகிறது.. இதனால்தான் ‘பெரிய போட்டிகளில் சிலபல முடிவுகளை நாங்கள் தவறாக எடுத்தோம்’ என்பதை இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

 

ஆர்சிபியின் தோல்விகள் பற்றி விராட் கோலி கூறியிருப்பதாவது:

 

முடிவுகள் எங்கு சரியாக எடுக்கப்படவில்லையோ அங்குதன தோல்விகள் ஏற்பட்டன. நான் இங்கு உட்கார்ந்து கொண்டு அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை என்று கூறினால் அது சரியாக இருக்க முடியாது. உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். நீங்கள் மோசமான முடிவுகளை எடுக்கும் போது பிற அணிகள் நல்ல முடிவுகளை எடுக்கின்றனர். நாம் தோற்கிறோம்.

 

முடிவுகளைச் சரியாக எடுக்கும் அணி கோப்பையை வெல்கிறது.

 

கடந்த ஆண்டு ஆர்சிபி மார்க்கெட்டிங் விளம்பரங்கள் ‘கோப்பை நமதே’ என்று முழக்கமிட்டன. ஆம், நான் உணர்ந்து விட்டேன், தொடர் தொடங்கும் முன்பே நாங்கள்தான் கோப்பையை வெல்வோம் என்று முழங்கினர். பிற 7 அணிகளும் இருக்கின்றனவே? நாம் எதார்த்த மனநிலையில்தான் யோசிக்க வேண்டும். ஒரு அணி ஆதிக்கம் செலுத்தும் தொடர் அல்ல இது.  என்னைப்பொறுத்தவரையில் நான் அந்த மார்க்கெட்டிங்கைப் புறக்கணிக்க முடியும் என்று உணர்ந்தேன், ஆனால் அனைவரும் அந்த மார்க்கெட்டின் உத்தியைப் புறக்கணிப்பார்கள் என்று நான் எப்படி உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியும். அது நம் மனதில் வந்து உட்கார்கிறது.

 

அதனால்தான் கூறுகிறேன் அணி பண்பாட்டுடன் இணைய வேண்டும். அணியின் அங்கமாக இருப்போம் தொலைதூர எதிர்பார்ப்புகளை எதற்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். வீரர்களை விட யாரும் போட்டியை வெல்வதில் தீவிரமாக இருக்க முடியாது. ஆகவே இந்த ஆண்டு அணியின் பண்பாடு என்பதை வரையறை செய்து கொள்ளவிருக்கிறோம். அனைத்து வீரர்களிடமிருந்தும் தொழில் நேர்த்தியை எதிர்பார்க்கிறோம்.

 

நாங்கள் இந்த அணியில் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை ஆனால் ஆர்சிபி இருக்கும். ஆகவே அணி பண்பாடு முக்கியம், வரவிருக்கும் வீரர்களுக்கும் சேர்வதுதான் அணிப்பண்பாடு என்பது.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x