Published : 04 Mar 2019 05:17 PM
Last Updated : 04 Mar 2019 05:17 PM

2019 உலகக்கோப்பைக்கான விவிஎஸ். லஷ்மணின் இந்திய அணி

மந்தமான பிட்ச்களில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணி இதனை உலகக்கோப்பை 2019-கான தயாரிப்பாகப் பார்த்து வருகிறது, இங்கிலாந்து பிட்ச்கள் அதிக ரன்கள் இலக்குக்கான பிட்சாகவே அமையும் என்று எதிர்பார்க்கும் வேளையில் இப்போதைய மிடில் ஆர்டர் பலவீனமாகக் காணப்படுகிறது.

 

தோனி இதுபோன்று ஆடிக்கொண்டிருந்தால் நிச்சயம் 300-325 இலக்குகளை விரட்டுவது மிகமிக் கடினம் என்றே கிரிகெட் தெரிந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், அன்று ஹைதராபாத் ஒருநாள் போட்டியின் போது கேதார் ஜாதவ் ஒருமுனையில் இல்லையெனில் தோனியினால் தனி நபராக வெற்றி பெற்றுக் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

 

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியினை முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் சொந்த விருப்பத் தெரிவாக அறிவித்து வருகின்றனர். கவுதம் கம்பீர் தன் அணியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் இடம் கொடுத்துள்ளார்.

 

விவிஎஸ். லஷ்மண் தன் அணியில் ரிஷப் பந்த்தை கழற்றி விட்டு தினேஷ் கார்த்திக்கைச் சேர்த்துள்ளார். ரிஷப் பந்த்தின் சமீபத்திய பார்ம் கேள்விக்குரியதாக இருப்பதால் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் அணியில் அவசியம் வேண்டும் என்று லஷ்மண் உணர்கிறார்.

 

ஆனால், நடப்பு ஒருநாள் தொடருக்கு தினேஷ் கார்த்திக் கழட்டி விடப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது அவர் உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்றே நினைக்கத்  தோன்றுகிறது. தோனிக்கு உள்ள ‘லாபி’ ஆதரவு தினேஷ் கார்த்திக்கிற்கு எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதே நிதர்சனம். தோனி கோலிக்கு பெரிய ஆதரவு, நிறைய ஆலோசனைகளை வழங்குகிறார் என்றெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பராக இருக்கும் போது கொடுக்கும் அறிவுரைகள், ஆலோசனைகள் தனக்கு பெரிய உதவியாக இருந்ததாக ரோஹித் சர்மாவும் தெரிவித்ததை சவுகரியமாக சில ஊடகங்கள் மறந்து விடுகின்றன.

 

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை உள்ளடக்கிய விவிஎஸ். லஷ்மணின் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வருமாறு:

 

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, ராகுல், தினேஷ் கார்த்திக், கலீல் அகமெட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x