Published : 19 Feb 2019 04:05 PM
Last Updated : 19 Feb 2019 04:05 PM

2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு: சென்னையில் முதல் ஆட்டம்: தோனி அணியை எதிர்த்து கோலி அணி மோதுகிறது

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்(டேர்டெவில்ஸ் பெயர்மாற்றம்).மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம்தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கின்றன. மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகிறது.

அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4  போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்தமாநிலத்திலும், 2 போட்டிகளை வெளிமாநிலத்திலும் விளையாடுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணி 3 போட்டிகள் வெளிமாநிலத்தில் விளையாடுகின்றன.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், " மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையடுத்து, முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டபின், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை, மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துபேசி, தேர்தல் தேதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்

தேதி

நேரம்

எண்

அணி

எதிரணி

இடம்

சனி

மார்-23

மாலை

1

சிஎஸ்கே

ஆர்சிபி

சென்னை

ஞாயிறு

மார்-24

மதியம்

2

கேகேஆர்

எஸ்ஆர்எச்

கொல்கத்தா

 

 

மாலை

3

மும்பை

டெல்லி(டிசி)

மும்பை

திங்கள்

மார்-25

மாலை

4

ராஜஸ்தான்

பஞ்சாப்

ஜெய்பூர்

செவ்

மார்-26

மாலை

5

டெல்லி

சிஎஸ்கே

டெல்லி

புதன்

மார்-27

மாலை

6

கேகேஆர்

பஞ்சாப்

கொல்கத்தா

வியா

மார்-28

மாலை

7

ஆர்சிபி

மும்பை

பெங்களூரு

வெள்ளி

மார்-29

மாலை

8

எஸ்ஆர்எச்

ராஜஸ்தான்

ஹைதராபாத்

சனி

மார்-30

மதியம்

9

பஞ்சாப்

மும்பை

மொஹாலி

 

 

மாலை

10

டெல்லி

கேகேஆர்

டெல்லி

ஞாயிறு

மார்-31

மதியம்

மாலை

11

12

எஸ்ஆர்எச்

சிஎஸ்கே

ஆர்சிபி

ராஜஸ்தான்

ஹைதராபாத்

சென்னை

திங்கள்

ஏப்-1

மாலை

13

பஞ்சாப்

டெல்லி

மொஹாலி

செவ்

ஏப்-2

மாலை

14

ராஜஸ்தான்

ஆர்சிபி

ஜெய்பூர்

புதன்

ஏப்-3

மாலை

15

மும்பை

சிஎஸ்கே

மும்பை

புதன்

ஏப்-4

மாலை

16

டெல்லி

எஸ்ஆர்எச்

டெல்லி

புதன்

ஏப்-5

மாலை

17

ஆர்சிபி

கேகேஆர்

பெங்களூரு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x