Published : 07 Feb 2019 04:38 PM
Last Updated : 07 Feb 2019 04:38 PM

முதல் டி20 தோல்வி: தோனியின் பெயரில் ஒரு விரும்பத்தகாத புள்ளிவிவரம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, இந்தப் போட்டியில் தோனி இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக 39 ரன்களை எட்டினார்.

 

தோனி களத்தில் இருக்கும் போதே ஓவருக்கு 60 ரன்கள் தேவை என்ற தமாஷு நிலைக்குச் சென்றது ஆட்டம். அவரும் அடிக்கிறார் அடிக்கிறார் பந்து போனால்தானே? அன்று அதிரடி நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனுகு 17 ரன்களில் இருந்த போது தோனி கேட்சை விட்டார், இதனால் அவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசியது வெற்றியின் முக்கியக் காரணியானது.

 

இந்நிலையில் 11 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டிலிருந்து 219 ரன்களை விரட்டுவதெல்லாம் சாத்தியமல்ல, ஆனால் கொஞ்சம் அடித்து ஆடி ரசிகர்களுக்காவது உற்சகாமூட்டியிருக்கலாம், இந்தியாவின் மிகப்பெரிய டி20 தோல்வி என்பதையாவது தவிர்க்க முனைந்திருக்கலாம்.

 

இந்நிலையில் இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டிகளில் டாப் ஸ்கோரை தோனி அடிக்கும்போதெல்லாம்  இந்திய அணி அந்தப் போட்டிகள் அனைத்திலும் தோல்வியைத் தழுவியது என்ற ஒரு எதிர்மறைச் சாதனை அவர் பெயரில் உள்ளது. அதன் விவரம் வருமாறு:

 

2012, சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 நாட் அவுட் என்று அதிக ஸ்கோரை தோனி எடுத்த போது இந்திய அணிக்கு 31 ரன்கள் தோல்வி ஏற்பட்டது.

 

2012, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தோனி அதிகபட்ச இந்திய தனிப்பட்ட ஸ்கோராக 38 ரன்களை எடுத்த போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோவ்லி தழுவியது.

 

2016, நாக்பூர், தோனி ஸ்கோர் 30,  இந்தியா நியூசிலாந்திடம் 47 ரன்களில் தோல்வி தழுவியது.

 

2017-ல் கான்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி 36 நாட் அவுட் என்று அதிகபட்ச இந்திய ஸ்கோரை எடுத்த போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

 

தற்போது 2019-ல் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோனி அணியின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 39-ஐ எடுத்தார், இந்திய அணி டி20-யின் மிகப்பெரிய தன் தோல்வியைச் சந்தித்து 80 ரன்களில் இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x