Published : 23 Jan 2019 11:13 AM
Last Updated : 23 Jan 2019 11:13 AM

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அணிகள் வெற்றி

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது.

இதில் ஒரு ஆட்டத்தில் சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை லீ சாட்லியர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த சாந்தோம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ஆதிசங்கர் 59, ஜெ.அஜய் சேத்தன் 39 ரன்கள் சேர்த்தனர். 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லீ சாட்லியர் அணி 17.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மற்றொரு ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஸ்ரீரங்கம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. எம்.விக்னேஷ்வரன் 50, எஸ்.ஜே.அபு ஷஜித் 32 ரன்கள் சேர்த்தனர். 160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கன்கார்டியா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக எஸ்.சின்னா 32 ரன் சேர்த்தார்.

இதையடுத்து நடைபெற்ற ஆட்டத் தில் சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங் கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருப்பூர் பிளாட்டோ அகாடமி அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பிளாட்டோ அகாடமி 19.5 ஓவர்களில் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

செயின்ட் பீட்ஸ் அணி தரப்பில் கமலேஷ்வரன் 4, எஸ்.நிகிலேஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 78 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் கோவை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணி, சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளி அணியை எளிதாக வீழ்த்தியது. முதலில் பேட் செய்த நீலாம்பாள் அணி 16 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

59 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 61 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பி.சச்சின் 20, டி.பிரசாந்த் 16 ரன்கள் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x