Last Updated : 22 Jan, 2019 05:32 PM

 

Published : 22 Jan 2019 05:32 PM
Last Updated : 22 Jan 2019 05:32 PM

இந்திய கிரிக்கெட் அணித்தேர்வுக் குழுவுக்கும் ரொக்கப்பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் வெற்றிகளையடுத்து பிசிசிஐ இன்று இந்திய அணித்தேர்வுக்குழுவின் 5 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது.

 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது. இதனையடுத்து நல்ல பேலன்ஸ் ஆன அணியைத்தேர்வு செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகிகள் கமிட்டி அணித்தேர்வுக்குழுவினருக்கும் பரிசுத் தொகை அறிவித்துள்ளனர்.

 

சிஓஏ சேர்மன் விநோத் ராய் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் டீம் இந்தியா ஆடிய விதம் குறித்து நாங்கள் மிகப்பெருமையடைகிறோம், கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்களுக்கு முன்னதாக ரொக்க ஊக்கத்தொகை அறிவித்தோம், இப்போது தேர்வுக்குழுவுக்கும் ரொக்கப் பரிசுத் தொகை அறிவித்துள்ளோம்.

 

ஒரு பேலன்ஸான இந்திய அணியைத் தேர்வு செய்ததில் தேர்வுக்குழுவின் 5 உறுப்பினர்களும் முக்கியப் பங்காற்றினர், இதனால் அணி நிர்வாகம் பலதரப்பட்ட அணிச்சேர்க்கையை வெற்றிகரமாக களமிறக்க முடிந்துள்ளது, இந்திய அணி வீரர்கௌம் கொடுக்கப்பட்ட பணியை அச்சமின்றி எதிர்கொண்டு சவாலான சூழ்நிலைகளையும் மீறி வெற்றி பெற்றுள்ளனர்” என்றார்.

 

இன்னொரு சிஓஏ உறுப்பினர் டயானா எடுல்ஜியும், “இந்தியாவின் சமீபத்திய ஆஸ்திரேலிய வெற்றிக்குக் காரணமான ஓவ்வொருவருக்கும் ஊக்கத்தொகை அளித்து பாராட்டப்பட வேண்டியவர்கள். ஐசிசி உலகக்கோப்பை இன்னும் 4 மாதத் தொலைவில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடர் நல்ல தயாரிப்பினை வழங்கியுள்ளது.

 

அணித்தேர்வாளர்கள் உலகக்கோப்பைக்குச் செல்லும் முக்கிய வீரர்கள் கொண்ட அணியில் கவனம் செலுத்தினர். திறமையான இளம் வீரர்களைத் தேர்வு செய்து அவர்களும் சிறப்பாக ஆடியதற்காக அணித்தேர்வுக்குழுவை பாராட்டுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x