Last Updated : 09 Jan, 2019 10:21 AM

 

Published : 09 Jan 2019 10:21 AM
Last Updated : 09 Jan 2019 10:21 AM

ஐசிசி தரவரிசையில் புஜாரா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முதன் முறையாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியத்தில் பேட்டிங் துறையில் முக்கிய பங் காற்றிய சேதேஷ்வர் புஜாரா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், ஆஸ்திரே லிய தொடரில் 3 சதங்களுடன் 521 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன்களில் இதற்கு முன்னர் பரூக் இன்ஜினியர் கடந்த 1973-ம் ஆண்டு 17-வது இடத்தை பிடித்திருந்ததே சிறப்பானதாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார். தற்போது, தோனி தனது 19-வது இடத்தை பிடித்திருந்ததே சிறந்த சாதனை யாக இருந்தது. அதேவேளை யில் தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார் ரிஷப் பந்த்.

தோனி டெஸ்ட் போட்டியில் விளையாடிய காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 19-வது இடத்தை பிடித்திருந்தார். 9 டெஸ்ட் போட்டி களில் மட்டுமே விளையாடி உள்ள ரிஷப் பந்த், ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக தரவரிசை யில் 59-வது இடத்தில் இருந்தார். சிட்னி டெஸ்டில் 159 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்த ரிஷப் பந்த் ஒட்டுமொத்தமாக ஆஸ்தி ரேலிய சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பிங்கில் 20 கேட்ச் களுடன், பேட்டிங்கில் 350 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலமே தரவரிசையில் சிறப்பான இடத்தை எட்டியுள்ளார் ரிஷப் பந்த்.

ரவீந்திர ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 57-வது இடத்தையும், தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 5 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை யில் சிட்னி டெஸ்டில் 5 விக்கெட் கள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாள ரான இந்தியாவின் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 16-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

மொகமது ஷமி ஒரு இடம் முன் னேறி 22-வது இடத்திலும், ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத் திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் 116 புள்ளிகளுடன் எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்திய அணி முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. அதே வேளையில் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒரு புள்ளியை இழந்த போதிலும் 101 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x