Published : 16 Dec 2018 03:17 PM
Last Updated : 16 Dec 2018 03:17 PM

19 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள்: கேப்டனாக கிரேம் ஸ்மித்தைக் கடந்தார்; ஆஸி.யில் கிங் கோலியின் சில சாதனைத் துளிகள்

பெர்த் டெஸ்ட் போட்டியில் மிகப்பிரமாதமாக ஆடி மோசடி தீர்ப்பில் அவுட் ஆகி வெறுப்புடன் வெளியேறிய விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களைப் பிரித்து மேய்ந்துள்ளார். அவர் அங்கு செய்துள்ள சாதனைகள் பற்றிய தொகுப்பு.

 

இன்று அவருக்கு மோசடி தீர்ப்பு வழங்கியதால் இந்திய அணி 283 ரன்களுக்குச் சுருண்டு ஆஸி.க்கு 43 ரன்கள் முன்னிலை அளிக்க நேரிட்டது. ஆஸ்திரேலியா தற்போது இந்திய தீப்பொறி பந்து வீச்சுக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர், அந்த அணி சற்று முன் வரை 122/4 என்று உள்ளது

 

கோலியின் சாதனைகள்:

 

127 இன்னிங்ஸ்களில் 25 டெஸ்ட் சதங்கள். கோலியின் அதிவேக 25 சத சாதனையாகும் இது. இவருக்கு முன்னால் டான் பிராட்மேன் தான் உள்ளார், அவர் 68 இன்னிங்ஸ்களில் 25 டெஸ்ட் சதங்கள். சுனில் கவாஸ்கர் 130, சச்சின் டெண்டுல்கர் 138.

 

ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள், 19 இன்னிங்ஸ்களில், இதுவரை 2 வெளிநாட்டு பேட்ஸ்மென்கள்தான் இவரை விட அங்கு அதிக சதங்களை எடுத்துள்ளனர், ஜாக் ஹாப்ஸ் 9 சதங்களையும், வாலி ஹாமண்ட் 7 சதங்களையும் எடுத்துள்ளனர். சட்கிளிப் மற்றும் சச்சின் டெண்டுல்கரும் அங்கு 6 சதங்களை எடுத்துள்ளனர்.

 

வெளிநாட்டு பேட்ஸ்மென்களில் ஆஸியில் அதிக சராசரி வைத்திருப்பவரும் கோலியே. குறைந்தது 15 இன்னிங்ஸ்கள் கணக்கில் கோலி 63 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளார், சச்சின் டெண்டுல்கர் மட்டுமே அடுத்ததாக 53.20 சராசரி வைத்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாது, ஆஸ்திரேலியாவில் சேர்த்து 10 சதங்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. அதுவும் 49 இன்னிங்ஸ்களில். சச்சின் டெண்டுல்கர்தான் 15 சதங்களை இந்த நாடுகளுக்கு எதிராக எடுத்த ஆசிய பேட்ஸ்மென் ஆவார். சச்சின் 96 இன்னிங்ஸ்களில் 15 சதங்கள்.

 

சர்வதேச கிரிகெட்டில் அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக கோலியின் 34வது சதமாகும் இது.  கிரேம் ஸ்மித் கேப்டனாக 33 சதங்கள்.  ரிக்கி பாண்டிங் தான் கேப்டனாக அதிக சதங்களாக 41 சதங்களை எடுத்துள்ளார்.கேப்டனாக கோலி டெஸ்ட்டில் 18 சதங்கள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 16 சதங்கள்.

 

ஆஸ்திரேலியாவில் பெர்த், மெல்போர்ன், அடிலெய்ட் , சிட்னி மைதானங்களில் கோலி சதமெடுத்துள்ளார், பிரிஸ்பனில் இல்லை, சச்சினும் இதே போலவே பிரிஸ்பன் தவிர இதே மைதானங்களில் சதம் எடுத்துள்ளார்.

 

ஆதாரம்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x