Published : 15 Dec 2018 06:36 PM
Last Updated : 15 Dec 2018 06:36 PM

குறிப்பிட்ட சமயத்தில் சறுக்கிய ஆஸி. பவுலிங்: பாய்ந்த விளாசிய ரஹானே

ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சுக்கே பொருந்தக்கூடியதான பிட்சில் இந்திய பவுலர்களின் முதல் ஒருமணி நேர தவறான புரிதலுக்குப் பிறகு சரியாக அமைந்தது, ஆனால் ஆஸ்திரேலியப் பந்து வீச்சு நன்றாக்த் தொடங்கி ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் சறுக்கியது.

 

முதல் நாள் ஆட்டத்தில் கடும் வெயிலில் பிட்சில் தொடக்கத்தில் இருந்த ஈர்ப்பதம் காய்ந்து பந்துகள் எகிறின, ஆனாலும் 38 டிகிரி வெயிலில் இந்திய வேகப்பந்து வீச்சு சரியாக வீசி, களைப்படையவும் இல்லை, காயமடைவதற்கு ஏதுவான தருணமாகும் அது, ஆனாலும் மீண்டனர். ஆனால் ஆஸ்திரேலியா தொடக்க 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஒன்று முழுதாக புல் லெந்தில் வீசி கோலிக்கு இறங்கியவுடனேயே அவரது பலமான ட்ரைவ் ஷாட்களுக்கு வீசியது, ஹேசில்வுட் ஸ்டம்பில் வீசிய ஓவர்பிட்ச் பந்துகளை கோலி 3 பவுண்டரிகள் விளாசி 12 பந்துகளில் 19 என்று ஆக்ரோஷமாகத் தொடங்கினார்.

 

புஜாரா நன்றாக ஆடிய நிலையில் அவரை ஒருவாறு லெக் திசை பொறியில் சிக்கவைத்து விலா உயரப் பந்தில் அவர் லெக் திசையில் எட்ஜ் செய்ய வைக்கப்பட்டார்.

 

அப்போது 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழ்ந்த நிலையில் ரஹானே களமிறங்குகிறார். கோலியுடன் ஆடும் கடைசி அனுபவ பேட்ஸ்மென் இவர்தான், இவருக்குப் பிறகு ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, இருவரையும் நெருக்கடியில் நம்ப முடியாது, அப்போது ரஹானேவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் செய்யாமல், நேதன் லயன், ரஹானேவுக்கு எதிராகக் கொண்டுள்ள சக்சஸ் தெரியாமல் ஆஸி. பவுலர்கள் மாறி மாறி ரஹானேவுக்கு ஃபுல் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசி அவர் எதிர்த்தாக்குதலில் வெளுத்துக் கட்டத் தொடங்கினார், ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு பலவீனமானவர் கிடையாது ரஹானே, இது புரியாமல் வீசியதில் விறுவிறுவென 23 ரன்களுக்கு வந்தார் ரஹானே, இதில் ஒரு அப்பர் கட் சிக்சரும் அடங்கும். முக்கியமான இந்தக் கட்டத்தில் வழக்கத்துக்கு விரோதமாக ஆஸ்திரேலிய பந்து வீச்சு சறுக்கியது. மேலும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு உகந்த களவியூகம் அவசியம், ஆனால் டிம் பெய்ன் அப்படி எதுவும் செய்யவில்லை.

 

இதைத்தான் உஸ்மான் கவாஜாவும் இன்றைய ஆட்டம் முடிந்தவுடன் கூறினார், “பவுலர்களுக்கு இன்னமும் பிட்சில் சாதகம் உள்ளது, நாங்கள் அவ்வப்போது நன்றாக வீசினோம், சிலபோது சரியாக வீசவில்லை. நாங்கள் இன்னமும் கூட கட்டுக்கோப்பாக வீசியிருக்க வேண்டும். ஆனால் இந்திய பேட்ஸ்மென்களை பாராட்டியாக வேண்டும், நன்றாக ஆடினார்கள். பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். பீட் செய்து கொண்டேயிருக்க வேண்டும், அது எட்ஜ்  ஆகிறதோ, இல்லையோ. இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, எங்கள் கைதான் ஓங்கியிருக்கிறது. ரஹானே இறங்கி ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் மீண்டும் சரிசெய்து தடுப்பாட்டத்துக்குக் கொண்டு வந்தோம். நாளை அனைத்தையும் சரி செய்து விடுவோம் என்று நினைக்கிறேன்.

 

தொடக்கத்தில் இந்தக் கூட்டணியை நாளை உடைத்து விட்டால் பிறகு அவர்களுக்குக் கடினம்தான்.  ஆனாலும் இன்னும் கட்டுக்கோப்பு அவசியம் என்று கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x