Last Updated : 13 Dec, 2018 06:35 PM

 

Published : 13 Dec 2018 06:35 PM
Last Updated : 13 Dec 2018 06:35 PM

அடிலெய்ட் டெஸ்ட்டில் 16 முறை நோ-பால் வீசிய இஷாந்த்; ஒரே ஓவரில் 4 நோ-பால்கள், நடுவர்கள் கவனிக்காமல் விட்ட தவறு

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 16 முறை பவுலிங்கில் முன்கிரீஸைத் தாண்டி காலை வைத்து நோ-பால் வீசினார் என்று டெய்லி டெலிகிராப் ஊடகம் தொலைக்காட்சிப் பதிவுகளைக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதில் ஒரே ஓவரில் 4 முறை அவர் நோ-பால் வீசியதை நடுவர்கள்பார்க்கவில்லை, 3வது கண்ணும் கண்டுகொள்ளவில்லை என்று வர்ணனையில் ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டார். 2 நோபால்களில் இஷாந்த் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு பறிபோனது. பாட் கமின்ஸ் எல்.பி. நோ-பால் ஆனது. ஆனால் இப்போது இஷாந்த் சர்மா வீசி நடுவர்கள் பார்வையிலிருந்து தப்பிய நோ-பால்களால் இஷாந்த் மீது கவனக்குவிப்பு அதிகமாகியுள்ளது.

 

அடிலெய்டில் மொத்தமாக 5 முறை நோபால் வீசினார் இஷாந்த், இதைத் தவிர பார்க்காமல் விட்ட நோ-பால்கள் தனிக்கதை.

 

ரவிசாஸ்திரியாகட்டும், பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் ஆகட்டும் இஷாந்த் சர்மாவின் இந்த நோ-பால் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை, ஆனால் அடிலெய்ட் பிரச்சினைக்குப் பிறகு தற்போது பெர்த்தில் இஷாந்த் சர்மா தன் நோ-பாலைக் குறைக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

விராட் கோலியே அடிலெய்ட் வெற்றி பற்றி குறிப்பிடும்போது அனைவரும் வெற்றியைக் கொண்டாடினோம் ஆனால் இஷாந்த் சர்மா கொண்டாடவில்லை என்று நோ-பால்களை சூசகமாகக் குறிப்பிட்டார். இஷாந்த் சர்மா, “ஒரு மூத்த வீரராக இருந்து கொண்டு நான் நோ-பால்கள் வீசக்கூடாது” என்று கடும் ஏமாற்றத்துடன் தெரிவித்தார்.

 

இந்நிலையில் பேட்ஸ்மென் இல்லாமல் ஒரு ஸ்டம்பை நோக்கி இஷாந்த் சர்மா பந்து வீசினார், முன் கால் முன் கிரீசுக்கு பின்னால் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வீசியது கோச் பாரத் அருணையும் கேப்டன் விராட் கோலியையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

 

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் தானும் சேஞ்ச் ரூமில் வீடியோக்களைப் பார்த்ததாகவும் ஆனால் இவை உடனுக்குடனே நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும் பட்சத்தில் பிரச்சினையில்லை என்று சமாதானமாகப் பேசியுள்ளார்.

 

ஆகவே பெர்த்தில் இஷாந்துக்கும் நடுவர்களுக்கும் நெருக்கடி அதிகம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x