Published : 13 Dec 2018 09:47 AM
Last Updated : 13 Dec 2018 09:47 AM

10 ஆண்டுகள் ஆகியும் குழப்பம் தெளியாத டிஆர்எஸ்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் களநடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம் (டிஆர்எஸ்) எனும் முறையை கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. களநடுவரின் முடிவு 100 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும், தவறுகள் ஏதேனும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த தொழில் நுட்பம் கொண்டுவரப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் பேட்ஸ் மேன் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் எல்பிடபிள்யூ முறை யில் (கால்காப்பை பந்து தாக் குவது) ஆட்டமிழந்தாலோ, அல்லது பந்து கால்காப்பை சரியாக தாக்கிய போதிலும் அவுட் கொடுக்கப்படாவிட்டாலோ களநடுவரின் தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இதே போன்று பந்து மட்டையை தாக்காமல் கால்காப்பில் உரசிய வாறு சிலசமயம் பேட்ஸ்மேன்கள் கேட்ச் முறையில் ஆட்டமிழப்பது உண்டு.

பந்து மட்டையில் உண்மையாக உரசாமல் சென்றிருப்பினும் கள நடுவரின் முடிவால் பேட்ஸ்மேன் களால் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியேறுவார்கள். இதனால் முக்கியமான கட்டங்களில் ஆட்டத் தின் முடிவு தலைகீழாக மாறிய சம்பவங்களும் நடந்துள்ளன. இது போன்ற தவறுகளை முற்றிலும் நீக்குவதற்காகவே டிஆர்எஸ் முறை கிரிக்கெட்டில் புகுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்ட பின் இதில் இந்திய அணி பல்வேறு பாதகங்களை சந்தித்தது.

இதனால் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி டிஆர்எஸ் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்திய அணி பங்கேற்ற டெஸ்ட் தொடர்களில் மட்டும் டிஆர்எஸ் முறை செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த தொழில்நுட்பத்தை போட்டியில் கலந்து கொள்ளும் இருநாட்டு வாரியங்களும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால் மட் டுமே அமல்படுத்தப்பட வேண்டும் என்ற விதி இருந்ததை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சரியாக பயன்படுத்திக் கொண்டது.

ஒருவழியாக அதிநவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்ட பிறகே சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு டிஆர்எஸ் முறையை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் அணி இசைவு தெரிவித்தது.

இந்த டிஆர்எஸ் முறையில் பந்து பயணிக்கும் பாதையை அறிவதற்காக ‘ஹவாக் ஐ’ எனும் தொழில்நுட்பமும், பந்து மட்டையில் உரசியதா என்பதை கண்டறிய ஸ்னிக்கோ மீட்டர் எனும் தொழில்நுட்பமும் பயன் படுத்தப்படுகிறது.

டிஆர்எஸ் முறையில் பயன் படுத்தப்படும் ‘ஹவாக் ஐ’ எனும் தொழில்நுட்பமும் பந்து மட்டையை ஊடுருவி ஸ்டெம் புகளை தாக்குகிறதா, அல்லது ஸ்டெம்புகளை விட்டு விலகிச் செல்கிறதா என்பதை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு அணிக்கும் இக்கட் டான சூழ்நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்படும் போதோ, அல்லது பீல்டிங் அணிக்கு அவுட் மறுக்கப்படும் போதோதான் டிஆர்எஸ் முறை கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இம்முறை அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா இரு முறையும், ரஹானே ஒரு முறையும் டிஆர்எஸ் தொழில்நுட்ப உதவியால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தனர்.

இதில் நேதன் லயன் வீசிய பந்து ஒருமுறை புஜாராவின் (2-வது இன்னிங்ஸில் 17 ரன்களில் இருந்த போது) கால்காப்பை தாக்கி யது. களநடுவர் அவுட் கொடுத்த நிலையில் டிஆர்எஸ் முறையில் பந்து டெஸ்ம்புகளுக்கு மேல் செல் வது தெரியவந்தது. ஆனால் நேதன் லயன் இதில் நம்பிக்கை கொள்ள வில்லை. தனது அதிருப்தியை களத்திலேயே அவர், உடல்மொழி அசைவுகளால் வெளிப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், “டிஆர்எஸ் முறை சரியானது கிடையாது. இந்த தொழில்நுட்பம் ஏமாற்றம் அடையவேச் செய்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் கேப்டன் டிம் பெய்ன் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பந்து பயணம் செய்யும் விதத்தை கண்டறியும் ‘ஹவாக் ஐ’ தொழில்நுட்பத்தில் அதிக அளவிலான பந்துகள் ஸ்டெம்பு களுக்கு மேலே செல்வதாக காட்டப்படுகிறது. ஆனால் களத்தில் வீசப்படும்போது அதுபோன்று இருக்காது” என்ற கருத்தையும் டிம் பெய்ன் முன்வைத்தார்.

சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு டிஆர்எஸ் முறை குறித்து விமர் சனத்தை ஆஸ்திரேலியா முன் வைத்திருப்பது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் ‘ஹவாக் ஐ’, ‘விர்ச்சுவல் ஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் விர்ச்சுவல் ஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இயன் டெய்லர், ஆஸ்தி ரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித் துள்ள பேட்டியில், “எந்த ஒரு வீரர், கேப்டன், அதிகாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவ தற்கான கதவுகள் திறந்தே உள்ளன.

ஏதேனும் பிரச்சினையை அவர் கள் எதிர்கொண்டிருந்தால், அதனை தீர்த்துக்கொள்ள அவர் களை, நாங்கள் வரவேற்கிறோம். பெரிய திரையில் பார்க்காத விஷயங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். வீரர்கள் எங்களை அழைத்தால் போதும், எங்களது பணியாளர்கள் அனைத்தையும் காண்பிப்பார்கள்.

சிலசமயங்களில் முடிவுகளில் வித்தியாசம் இருக்கலாம். நாங்கள் செய்வதை தவறு என்றுகூட நிரூ பிக்கலாம். ஆனால் எதையும் நாங் கள் மறைக்கவில்லை. பல்வேறு தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து சர்வதேச நடுவர்களுக்கு, ஐசிசி பயிற்சி அளித்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நெருக் கமான பால் டிராக்கிங்கில் கள நடுவரின் தீர்ப்பை மாற்றுவதற்கு 3-வது நடுவருக்கு அதிகாரம் உள்ளது.

புஜாராவின் ரிவ்யூ நிகழ்வில்கூட ஷேன்வார்ன் பந்து ஸ்டெம்பின் மேல்பகுதியை தாக்கும் என்றார். ஆனால் பக்கவாட்டு கோணத் தில் பார்த்த பிறகு தான் கூறியது தவறுதான், பந்து ஸ்டெம்பு களுக்கு மேல்தான் செல்லும் என்று கூறினார். வீடியோ காட்சி களை ஸ்லோ-மோஷனில் பார்ப் பதற்காக பக்கவாட்டில் புதிதாக கேமராக்களை பாஃக்ஸ் தொலைக் காட்சி நிறுவனம் கொண்டு வந் துள்ளது. அவை எங்களுக்கு தெளி வான அடையாளங்களை வழங்கு கிறது.

டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் இந்தியா தெரிவித்த கவலை களுக்கு நான் ஆதரவே தெரிவித் திருந்தேன். நான் எப்போதுமே ஆளுமை செலுத்துவதற்கான அதி காரம் கொண்ட மூன்றாவது நடு வரின் பெரிய ரசிகராக இருக்கிறேன். மேலும் தொழில்நுட்பத்தை முழு மையாகப் புரிந்துகொள்ளும் சிறப்பு பயிற்சி பெற்ற நடுவர்கள் இருந்தால் அவர்களை இன்னும் அதிகம் விரும்புவேன்.

இவ்வாறு இயன் டெய்லர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x