Published : 20 Nov 2018 06:31 PM
Last Updated : 20 Nov 2018 06:31 PM

‘ஒவ்வொரு பந்திலும் வெற்றி பெற வேண்டும்’ - ஆக்ரோஷம் என்பதற்கு கோலி ஒருபடி மேலே போய் விளக்கம்

ஆக்ரோஷம் என்பது வெற்றிபெறுவதற்கான ஒரு உந்துதல், நாட்டுக்காக ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் உந்துதல் என்று விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

நாளை பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில்

ஆக்ரோஷம் என்பது என்னைப் பொறுத்தவரயில் அணிக்காக ஒவ்வொரு பந்திலும் வெற்றி பெறுவது, ஆக்ரோஷம் என்றால் பலர் பலவிதமாக அர்த்தம் கொண்டிருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என்ன ஆனாலும் வெற்றி பெறுவஹ்டு, அணிக்காக 120% களத்தில் அர்ப்பணிப்பது, ஒவ்வொரு பந்திலும் வெற்ரி பெறுவது

இது விளையாட்டுக் களத்திலும் இருக்கலாம் அல்லது வெளியில் அமர்ந்து வேறொருவருக்காக கைதட்டுவதாக இருக்கலாம், பேட்டிங், ரன்னிங் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்... இதுதான் என்னைப் பொறுத்தவரை ஆக்ரோஷமாகும்.

களத்தின் சூழலைப் பொறுத்து ஆக்ரோஷம் அமையும், எதிரணியினர் நம் மீது ஆக்ரோஷம் காட்டினால் நாமும் அதனை எதிர்த்துச் செயல்பட வேண்டும்” என்றார் விராட் கோலி

ஸ்மித், வார்னர் தடை பற்றி நழுவல்:

ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் தடை பற்றிய கேள்விக்கு, “எனக்கு உள்ளபடியே அந்த முடிவுகளுக்குப் பின்னணியில் உள்ளது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அனைவருக்கும் என்ன நடந்தது என்று தெரியும், அது பற்றிய விவரங்கள் தெரியாமல் நான் கருத்து தெரிவிக்கக் கூடாது

எந்த அணியையும் குறைவாக மதிப்பிடக் கூடாது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு நாங்கள் ஆஸி.யுடன் ஆடவில்லை, எனவே மைதானத்தில் சூழ்நிலை எப்படியிருக்கும் என்பதை என்னால் கூற முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x