Published : 18 Oct 2018 08:00 PM
Last Updated : 18 Oct 2018 08:00 PM

தியோதர் டிராபியில் இருந்து கம்பீர் நீக்கம்: பிசிசிஐ அமைப்பை வறுத்து எடுத்த நெட்டிசன்கள்

வரும் 23-ம் தேதி தொடங்க இருக்கும் தியோதர் டிரோபி போட்டியில் இருந்து மூத்த வீரர் கவுதம் கம்பீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பிசிசிஐ அமைப்பை நெட்சன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

வரும் 23-ம் தேதி இந்தியா ஏ ,பி, சி அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்வு செய்து அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியத் தொடர், உலகக்கோப்பைப் போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இறங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்துவரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கம்பீர் சிறப்பாக விளையாடி ஸ்கோர் செய்தபோதிலும் கூட அவர் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், யுவராஜ் சிங் பெயரும் சேர்க்கப்படவில்லை.

விஜய் ஹசாரே போட்டியில் டெல்லிஅணியின் கேப்டனான கவுதம் கம்பீர், இதுவரை 9 ஆட்டங்களில் 517 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 57.44 ஆக இருக்கிறது. விஜய் ஹசாரேயில் அதிக ரன்கள் சேர்த்துள்ள தமிழக வீரர் அபினவ் முகந்தின் ரன்களை எட்டிப்படிக்க இன்னும் கம்பீருக்கு 43 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெறும் மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் நிச்சயம் அபிநவ் முகுந்த் சாதனையைக் கம்பீர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் கம்பீரை தியோதர் போட்டியில் தேர்வு செய்யாமல் பிசிசிஐ நிராகரித்து இருப்பது நெட்டிசன்கள் மத்தியிலும், கம்பீர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கோபத்தை வரவழைத்து இருக்கிறது. ட்விட்டரில் பிசிசிஐ அமைப்பைக் கடுமையாகச்சாடி, வறுத்து எடுத்துள்ளனர்.

“ பிசிசிஐ அமைப்பும் தேர்வாளர்களும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்கிறார்கள். மிகச்சிறந்த வீரரான கம்பீருக்கு தியோதர் டிராபியில் இடமில்லையா. வெட்கமாக இருக்கிறது”என்று ஆயுஷ் மிட்டல் என்பவர் தெரிவித்துள்ளார்

பிரணீ்த் குமார் என்பவர், விஜய் ஹசாரே கோப்பையில் 2-வது அதிகமான ரன்கள் குவித்தவர் கம்பீர் அவருக்கு இடமில்லையா. பிசிசிஐ நிர்வாகம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது. வீரர்கள் குறைவான வயதில் இருந்தால்தான் ரன்கள் ஸ்கோர் செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“விஜய் ஹசாரே கோப்பையில் அதிகமான ரன்கள் சேர்த்த 2-வது வீரர் கம்பீருக்கு இடமில்லைஎன்றால் என்ன தேர்வுக்குழு இருக்கிறது, எம்எஸ்கே பிரசாத் எதைப்பார்த்துத் தேர்வு செய்கிறார்”என்று சிலர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x