Last Updated : 18 Oct, 2018 06:32 PM

 

Published : 18 Oct 2018 06:32 PM
Last Updated : 18 Oct 2018 06:32 PM

தியோதர் டிராபி: அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் சேர்ப்பு: கம்பீர், யுவராஜ் சிங்குக்கு நோ

வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள தியோதர் டிராபோ போட்டியில் இந்திய ஏ ,பி, சி அணியில் அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.அதேசமயம், உலகக்கோப்பை கனவுடன் தீவிர பயிற்சியில் இருக்கும் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை

இதில் இந்திய ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், பி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், சி அணிக்கு ரஹானே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று அணிகளிலும் முக்கியமான வீரர்கள் இடம் பெற்று இருப்பதால், தியோதர் டிராபி போட்டியில் செயல்படும் வீரர்கள் அடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிக்கும், ஆஸ்திரேலிய தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. வழக்கமாக விஜய் ஹசாரே கோப்பையின் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் உள்ள வீரர்கள் இடம் பெறுவது தியோதர் டிராபியில் வழக்கம் ஆனால், உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருப்பதால், வீரர்களை தேர்வு செய்யும் நெருக்கடியிலும், பகுப்பதிலும் பிசிசிஐ இருப்பதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டு வந்த அஸ்வின், ரஹானே ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டிக்கான தியோதர் டிராபியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா ஏ அணியில் பிரித்வி ஷா, தினேஷ்கார்த்திக் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தியோதர் டிராபியில் சிறப்பாக தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மேலும், 150கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசக்கூடிய ஜார்கண்ட் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் இந்திய பி அணியில் விளையாட உள்ளார். இவருடன் மயங்க் அகர்வால், நதீம், ஹனுமா விஹாரி, உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்தியா சி அணியில் சுப்மான் கில், டெல்லி வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், உலகக்கோப்பை கனவுடன் தீவிர பயிற்சியில் இருக்கும் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், இந்த வீரர்கள் ஓட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இந்தியா (ஏ)

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), பிரித்வி ஷா, அன்மோல்பிரித் சிங், அபிமன்பு ஈஸ்வரன், அங்கித் பாவ்னே, நிதின் ராணா, கருண் நாயர், குர்ணால் பாண்டியா, அஸ்வின், ஸ்ரேயாஸ் கோபால், முலானி, முகமது சிராஜ், தவல் குல்கர்னி, சித்தார்த் கவுல்

இந்தியா (பி)

ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), மயங்க் அகர்வால், ரிதுராஜ் கெய்க்வாட், பிரசாந்த் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அங்குஷ் பெயின்ஸ், ரோஹித் ராயுடு, கவுதம், மயங்க் மார்கண்டே, நதீம், தீபக் சாஹர், வருண் ஆரோன், உனத்கத்

இந்தியா (சி)

அஜின்கயே ரஹானே(கேப்டன்), அபினவ் முகுந்த், சுப்மான் கில், ரவிக்குமார் சம்ரத், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ராய், நவ்தீப் சைனி, ரஜ்நீஷ் குர்பானி, உமர் நசீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x