Published : 18 Oct 2018 10:15 AM
Last Updated : 18 Oct 2018 10:15 AM

இளையோர் ஒலிம்பிக்கில் தமிழக வீரர் பிரவீனுக்கு வெண்கலம்

இளையோர் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம் வென்றார்.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ்நகரில் இளையோர் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நிலைகளாக நடத்தப்பட்ட ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் ஒட்டுமொத்தமாக 31.52 (15.68 +15.84) மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். கியூபாவின் அல்ஜான்ட்ரோ தியாஸ் 34.18 (17.14 + 17.04) மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கமும், நைஜீரியாவின் இம்மானுவல் ஒயிட்ஸ் மேய்வா 31.85 (16.34 + 15.51) மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

17 வயதான பிரவீன் சித்ரவேல் தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பண்ணை தொழிலாளி. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பிரவீன் இந்த ஆண்டு நடைபெற்ற பள்ளிகள் இடையிலான கேலோ இந்திய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

மேலும் கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். மங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வரும் பிரவீன் தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணியாற்றி வரும் இந்திரா சுரேஷிடம் நாகர்கோவிலில் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக கல்லூரி நிர்வாகம் பிரவீனுக்கு வகுப்புகளுக்கு வருவதில் இருந்து விலக்கும் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x