Last Updated : 16 Oct, 2018 02:13 PM

 

Published : 16 Oct 2018 02:13 PM
Last Updated : 16 Oct 2018 02:13 PM

நான் ஓய்வு பெறும்போது, என் கண்களில் கண்ணீர் வராது: கவுதம் கம்பீர் நெகிழ்ச்சி

நான் ஓய்வு பெறும் நாளன்று நிச்சயம் என் கண்களில் கண்ணீர் வராது, மகிழ்ச்சியுடனே எனது பேட்டையும், கால்பூட்சையும் ஒதுக்கிவைப்பேன் என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 1999-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை மூலம் அறிகமுகமான கவுதம் கம்பீர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 9 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 11 சதங்களும் அடங்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கம்பீர், கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த அதிரடி ஆட்டத்தையும், 2011-ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அடித்த ஆட்டத்தையும் இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை.

இந்நிலையில், கவுதம் கம்பீர் டெல்லியில் ஒரு ஊடகத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஓய்வு பெறுவதற்கு முன் கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்திருக்கிறீர்களா? எனக் கேட்டனர். அதற்குக் கம்பீர் கூறுகையில், “ இலக்கு என்பதெல்லாம் இல்லை, இப்போதுவரை நான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் ரன் சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன் விளையாடுவதே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து செய்வேன். என்னைப் பொருத்தவரை ரன்கள் சேர்ப்பது, வெற்றி பெறுவது, ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்.

இந்த நேரம்வரை எனக்குள் கிரிக்கெட் உணர்வு இருந்து கொண்டிருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சியான சூழலில் ஓய்வறையில் இருக்க விரும்புகிறேன். அதற்காகத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். என்னைப் பொருத்தவரை, நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்நாளில்கூட நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டேன்" எனத் தெரிவித்தார்

உங்களுடையே கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடைந்துவிட்டதா அல்லது, ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா, அதை நிரப்பத் தொடர்ந்து விளையாடுகிறீர்களா?

எப்பொழுதும் நீங்கள் வெற்றிடத்தை நிரப்பமுடியும். உங்கள் பயணத்துக்கு எப்போதும் முடிவு இல்லை. நான் என்ன நினைக்கிறேனோ அதை ஒருநாள் நான் அடைவேன். ஆனால்அதுவரை விளையாட முடியுமா எனத் தெரியவில்லை.

ஆனால், வெற்றிடத்தை நிரப்பவும், வாழ்க்கையில் சிலவற்றை அடையவும் நான் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். அதற்காகக் கடுமையாக உழைப்பேன்.

கிரிக்கெட்டில் புதிய வீரர்கள், இளம் வீரர்கள் வருகிறார்கள். சவால்கள் வித்தியாசமாக இருக்கின்றன, ஐபிஎல் அணிகள், நிர்வாகிகள் மிகவும் ஸ்மார்டாக மாறி வருகிறார்கள். முதலாவது ஐபிஎல் போட்டிக்கும் 11-வது ஐபிஎல் போட்டிக்கும் வீரர்களைத் தேர்வு செய்வதில் பல்வேறு ஸ்மார்ட்டான வழிகளைக் கையாள்கிறார்கள். ஐபிஎல் போட்டி அணிகளுக்கு இடையே கடினமானதாகவும், சிறந்த ஆரோக்கியமான போட்டியாகவும், சவால் நிறைந்ததாகவும் மாறி வருகிறது.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் இதுபோன்ற சவால்தான் தேவை. இந்த சவாலோடுநீங்கள் உங்களை உயர்த்திக் கொள்ளவும், வளரவும் முடியும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் அடைய வேண்டியவை அதிகமாக இருக்கிறது.

அடைவதற்கு ஒன்றுமை இல்லை என்று நான் சொல்லப்போதவில்லை. உண்மையில், சாதிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அதுதான் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது

இவ்வாறு கம்பீர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x