Published : 14 Oct 2018 09:39 AM
Last Updated : 14 Oct 2018 09:39 AM

வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர்... தொந்தரவு செய்ய விரும்பவில்லை: ஜார்கண்ட் அணிக்கு ஆடுவது பற்றி தோனி கூறியதாக தகவல்

பேட்டிங் பார்முக்காகத் தேடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விஜய் ஹஜாரே டிராபி நாக்-அவுட் போட்டிகளுக்காக ஜார்கண்ட் அணியில் ஆடமாட்டார் என்று ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் அணி குரூப் சி-யில் 32 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது. ஆனால் ஒருநாள் அணியை அறிவித்த இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விஜய் ஹஜாரே டிராபி காலிறுதியில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடுவார் என்று கூறினார். ஆனால் இப்போது ஜார்கண்ட் பயிற்சியாளர் அதனை மறுத்துள்ளார். இது இந்திய அணி நிர்வாகத்தில் கம்யூனிகேஷன் குளறுபடிகள் உள்ளதற்கான இன்னொரு உதாரணம் என்று சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் கூறும்போது, “தோனி ஒருநாள் போட்டிகளுக்காக ஹைதராபாத்தில் அக்.16ம் தேதி ரிப்போர்ட் செய்தாக வேண்டும். ஒருநாளைக்கு தோனி வரலாம், ஆனால் அவர் திட்டம் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. இதுவரை அவர் வரமாட்டார் என்றே தகவல். ஆனால் சாத்தியமுள்ளது.

உங்களுக்குத் தெரியும் அவர் தன் முடிவுகளை தானே எடுப்பார். வீரர்கள் நன்றாக ஆடிவருகின்றனர் ஆகவே ஒரு போட்டிக்காக வந்து வெறொருவர் இடத்தைப் பறித்துக் கொண்டு ஆட வேண்டிய அவசியமில்லை என்று தோனி கூறினார்” என்றார் ராஜிவ் குமார்.

மகாராஷ்ட்ராவை ஜார்கண்ட் வீழ்த்தினால் அரையிறுதிப் போட்டிகள் அக்.17, 18-ல் நடைபெறுகின்றன. எனவே தோனி பங்கேற்க வாய்ப்பில்லை.

தோனி அதிகநாள் முதல் தரப்போட்டியில் ஆடி 10 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் லிஸ்ட் ஏ போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக 2017-18 விஜய் ஹஜாரே டிராபி ஒருநாள் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஆடினார், இதுதான் லிஸ்ட் ஏ-வில் அவர் ஆடிய கடைசி போட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x