Published : 06 Oct 2018 03:31 PM
Last Updated : 06 Oct 2018 03:31 PM

வெஸ்ட் இண்டீஸ் ‘விண்டீஸ்’ ஆகிவிட்டதே: ஹர்ஷா போக்ளே வேதனை

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை அடைந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 649/9 என்று டிக்ளேர் செய்ய, மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 181 ரன்களையும் 2வது இன்னிங்சில் இன்று 196 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ச் மற்றும் 272 ரன்களில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது, குல்தீப் யாதவ் தன் முதல் டெஸ்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பயங்கரமான மே.இ.தீவுகள் அணியாக இருந்தக் காலக்கட்டத்தை, உலக கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய பங்களிப்பு கிரிக்கெட்டில் நீண்ட வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவுபடுத்தவே செய்யும். மே.இ,தீவுகள் அணிக்கு இந்தியாவில் பெரிய பின் தொடர்வு உண்டு. 1992-ல் தென் ஆப்பிரிக்கா வந்த பிறகு பின் தொடர்வு தென் ஆப்பிரிக்கா பக்கம் சென்றது, மே.இ.தீவுகள் கிரிக்கெட்டும் சரிவின் ஆரம்ப நிலையில் இருந்தது.

இந்நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே தொடர் ட்வீட்களில் வேதனை தெரிவித்தபோது, “வெஸ்ட் இண்டீஸ் என்பது எனக்கு பல்வேறு விஷயங்களை அறிவுறுத்துகிறது. கிரேட் பிளேயர்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள், தாக்கம் செலுத்தும் ஆளுமை நிரம்பிய பேட்ஸ்மென், பிரமாதமான ரசிகர்கள், கேளிக்கை, கிரிக்கெட்டுக்கு மரியாதை, ஸ்லெட்ஜிங் கிடையாது, இசை, கூத்து.. இப்போடு விண்டீஸ் என்று கூறப்படுவது பொருத்தம்தான் ஆனாலும் நான் விண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் ஆக முடியும் என விரும்புகிறேன்.

இந்த மே.இ.தீவுகள் அணியில் எனக்கு பிராத்வெய்ட், ஷேய் ஹோப், சேஸ், ஹோல்டர், கேப்ரியல், இவர்களும் இவர்களுக்கு முந்தைய சில வீரர்கள் போல் சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினர், ஆனால் அவர்கள் இன்ன வீரர்களாக ஆக முடியும் என்ற நம் சிந்தனைக்கு ஏற்ப ஆகமுடியவில்லை.

ஒன்றரை நாளில், வெஸ்ட் இண்டீஸ்... சாரி...விண்டீஸ், இருமுறை ஆல் அவுட் செய்யப்பட்டனர். அதுவும் மிகச்சிறந்த பேட்டிங் பிட்சில். நம் கிரிக்கெட்டை எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உதாரணமாகும் இன்னொரு போட்டி” என்று தொடர் ட்வீட்களில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x