Published : 29 Sep 2018 10:04 PM
Last Updated : 29 Sep 2018 10:04 PM

சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை வீழத்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

கொல்கத்தாவில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தாஅட்லட்டிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி.

10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. ரிலையன்ஸ் குழுமத்தின் நீட்டா அம்பானி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கடந்த 2014–ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் ஏடிகே அணியும், 2015–ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016–ம் ஆண்டில் ஏடிகே அணியும், கடந்த ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

இந்த நிலையில் 5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கொல்கத்தாவில் இன்று 7.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தா விவேகானந்தா யுப பாரதி கிரிகோன் மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 19 அவது நிமிடத்தில் கேரள அணிக்கு கோல்அடிக்க கிடைத்த ஒரு மிகப் பெரிய வாய்ப்பு பறிபோனது. இதை போன்று 20 ஆவது நிமிடத்தில் ஏடிகே வீரர் எல் மைமவுனி நவுசருக்கு மஞ்சள் நிற அட்டையை காண்பிக்கப்பட்டது.

25 நிமிடங்களுக்குப் பிறகு ஏடிகே அணிக்கு கோல் அடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கேரள கோல் கீப்பர் அந்த பந்தை தட்டிவிட்டு அணியை காப்பாற்றினார்.

அதே நேரத்தில் முதல் 33 நிமிடங்களில் கேரள அணி 5 முறை கோல் அடிக்க முயற்சி செய்தும் ஏடிகே அணி கோல் கீப்பர் அதை தடுத்து நிறுத்தினர். இரு அணி வீரர்களும் மிகக் கடுமையான மோதியும் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. 36-வது நிமிடத்தில் புரோனே ஹால்டர் கோல் அடிக்க முயற்சித்தும் அதை தீரஜ் தடுத்துவிட்டார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி, ஒருவருக்குஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை வெளிக்காட்டியதால், கோலின்றி முதல்பாதி முடிந்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கியது, இதில் கேரள அணியில் சமதுக்கு பதிலாக பெகுசன் களமிறங்கினார். 57-வது நிமிடத்தில் ஏடிகே அணி வீரர் எல் மைமவுனி கோலாக்க கடுமையாக முயறசித்தும் அதை கேரள அணியின் கோல்கீப்பர் தீரஜ் தடுத்தார்.

70-வது நிமிடத்தில் கோல் அடிக்க கேரள அணி வீரர் போப்லாட்னி்க்கு வாய்ப்பு கிடைத்து அது கோலாகவில்லை. ஆனால், 77-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை போப்லாட்னிக் கோலாக்கி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின் உற்சாகமாக பந்தை கடத்திய கேரள அணியினர் 2-வது கோலை 86-வது நிமிடத்தில் அடித்தனர். அந்த அணி வீரர் சிலாவிசா ஸ்ஜானோவிக் கோல் அடித்து அசத்தினார். இதனால், கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

அதன்பின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்க ஏடிகே அணி வீரர்கள் பல முறை முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிவு வரை எந்த கோலும் ஏடிகே அணியால் அடிக்க முடியாததால், 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x