Published : 27 Sep 2018 05:06 PM
Last Updated : 27 Sep 2018 05:06 PM

நெஞ்சங்களை வென்றெடுத்த ஆப்கன் அணி: தோனியை அடுத்து சேவாக் உள்ளிட்டோர் ‘ட்வீட்டாரம்’

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் தோனி கூறியது போல் உண்மையில் ஆப்கானிஸ்தான் அணிதான் சிறப்பாக ஆடியது. ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது, நாளை இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் கதிகலக்க களமிறங்கியிருக்க வேண்டிய அணி அது.

பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வளர்ந்தவர்கள் ஆப்கான் வீரர்கள், தாலிபனியம், அமெரிக்க ஆக்ரமிப்பு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் ஆட்சி என்று பயங்கரமான் ஒரு சூழலில் வந்து ஒரு அணி மற்ற அணிகளை கதிகலக்கியது பெரிய பாராட்டுகளையும் கவனக்குவிப்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் ஆசியக் கோப்பை ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், சிலர் ட்வீட்டாராம் தந்துள்ளனர்:

டாம் மூடி: ஆப்கன் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இன்னொரு முறை தங்கள் அணி ஆட்கொள்ள வேண்டிய சக்தி என்பதை நிரூபித்துள்ளனர். 3 போட்டிகளில் சுலபமாக வென்றிருப்பார்கள். உலகக்கோப்பையில் எவ்வளவு அணிகள் ஆடப்போகிறது. என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: அவர்கள் ஆடிய 5 போட்டிகளிலுமே வென்றிருக்க வேண்டியது. யார் ஆசியக் கோப்பையை வென்றாலும் இந்த ஆசியக் கோப்பை ஆப்கான் அணியின் ஆட்டத்துக்காகவே நினைவில் தக்கவைக்கப்படும்.

சேவாக்: நம்ப முடியாத போட்டி, நினைவில் கொள்ள வேண்டிய டை. அவர்கள் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்கள். அவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் பெருமைக்குரிய ஒரு தருணம்.

ஷாகித் அப்ரீடி: ஆப்கான் அணியிடமிருந்து தனித்துவமான ஆட்டம். என்ன மாதிரியான கிரிக்கெட்! அதுவும் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக!

ரஸல் ஆர்னால்ட்: டீம் ஆஃப் தி ஏஷியா கப். வாழ்த்துக்கள் ஏசிபி, இவர்களை நிறைய பிடித்திருக்கிறது.

லஷ்மண்: இது சிறப்பான நாளாகும் ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு. இது நினைவுச்சின்னத்துக்கு உகந்த ஆட்டம், தொடர், ஒவ்வொரு ஆப்கான் வீரரும் தங்கள் உறுதி மற்றும் போர்க்குணத்துக்காக பெருமைப்பட வேண்டிய ஆட்டம். இந்த ஆப்கான் அணியில் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக உள்ளது. ஆசியக் கோப்பையில் கவர்ந்திழுத்த அணி.

தீப்தாஸ்குப்தா: ஆப்கான் கிரிக்கெட் ரசிகராக இருப்பதென்றால் அதற்கு உறுதியான நரம்புகள் வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அந்தநாள் ஷஜாத்துக்குச் சொந்தமானது.

ஹேமங் பதானி: ஆப்கானிஸ்தான் இறுதிக்குச் செல்லாதது எவ்வளவு பெரிய ஏமாற்றம். இந்தத் தொடரின் 2 சிறந்த அணிகள் சுவாரசியமான, விறுவிறுப்பான ஆட்டத்தைக் கொடுத்துள்ளனர்.

மொகமத் கயீஃப்: ஆப்கானிஸ்தான் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியான அணியே. டைதான், ஆனால் நம்ப முடியாத அளவுக்கு அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்கள் அணியில் ரியல் வின்னர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x