Published : 27 Sep 2018 09:44 AM
Last Updated : 27 Sep 2018 09:44 AM

இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் கருத்து

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம், பாகிஸ்தான் அணி படுதோல்விகளை சந்தித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கூட அந்த அணி போராடியே வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பாகிஸ் தான் அணியின் பேட்டிங்கை விட பந்து வீச்சு கடும் பின்னடைவை சந்தித்துள்ளளது. இந்நிலையில் அந்த அணியின் மூத்த வீரரான ஷோயிப் மாலிக் கூறியதாவது:

அணியை கட்டமைப்பதற்கு நேரம் தேவை. ஆனால் பயம் கொள்வதற்கோ, வீரர்களை மாற்று வதற்கோ இது நேரம் இல்லை. அதிக அளவிலான வீரர்களை மாற்றினால், புதிய வீரர்கள் செட்டில் ஆவதற்கும் நேரம் தேவை.

இந்திய கிரிக்கெட் அமைப்பு முறைகளை நாம் பார்க்க வேண்டும், அவர்கள் எந்த முறையில் வீரர்களை முன்னேற்றுகிறார்கள் என்பதையும் காண வேண்டும். அணி நிர்வாகம், கேப்டன், தேர்வுக் குழுவினர் தேர்வு செய்த வீரர் களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.

போட்டி முடிவடைந்த பிறகு எங்களது அறைக்கு வாரிய தலைவர் வருகை தந்து, எங்களுக்கு நம்பிக்கையை கொடுத் தார். சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என அவர், எங்களிடம் கேட்டுக் கொண்டார். இத்தகைய விஷயங்கள் விளையாட்டில் நடை பெறும். அணியில் வீரர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது என் பதை மறுக்கவில்லை.

இந்திய அணியுடன் ஒப்பிடும் போது நமது வீரர்களுக்கு உள்ள அனுபவத்தின் வித்தியாசத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் எந்த வகையில் பந்து வீசுகிறார்கள் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். பல போட்டிகளில் விளையாடிய வீரர் கள் மற்றும் தங்களுடன் விளை யாடும் இளம் வீரர்களிடம் இருந்து மட்டுமே எங்களது வீரர்களால் கற்றுக் கொள்ள முடியும். 200 போட்டிகளில் விளையாடியவர்கள் 5 முதல் 10 ஆட்டங்களில் விளை யாடியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது என்பது இல்லை. யாரும் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

அணியில் நீங்கள் மூத்த வீரராக இருந்தால், உங்களது பணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவது மட்டும் கிடையாது. இளம் வீரர் களுக்கு உதவ வேண்டும், அவர் களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். வெற்றி தேடிக்கொடுப் பது எப்படி கடமையோ, அதே போன்று இளம் வீரர்களுக்கு உதவி செய்வதும் கடமைதான். இது நிகழ்ந்தால் அதன் பின்னர் அணி சரியான பாதையில் பயணிக்கும்.

இவ்வாறு ஷோயிப் மாலிக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x