Published : 27 Sep 2018 09:14 AM
Last Updated : 27 Sep 2018 09:14 AM

‘தல’ தோனி கேப்டன்சியில் முதலும் கடைசியும்: ஒரு தற்செயல் சுவாரசியம்

ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது.

696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே.

தோனி 200 என்றெல்லாம் உடனடியாக ஹாஷ்டேக்குகள் உருவாகி அதைப்பற்றி ரசிகர்கள் பேசத்தொடங்கினர். ஆப்கான் அணியும் வரலாறு காணாத ஒரு டை-யில் அங்கம் வகித்தது குறித்து பெருமிதம் கண்டனர், அனைத்தையும் விட தோனியைப் பார்த்து தன் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்று வடிவமைத்துக் கொண்ட மொகமத் ஷெஜாத் மிக அருமையான அதிரடி சதம் கண்டு தன் ஆசானின் பெருமைக்குரிய சிஷ்யரானார்.

தோனியின் 200-வது ஒருநாள் போட்டி, இது அவரது ஒருநாள் கேப்டன்சியில் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது அப்படிப்பார்க்கும் போது 2007-ல் இந்திய அணி ராகுல் திராவிட் தலைமையில் உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி இந்திய அணி கடும் சரிவிலிருந்த காலக்கட்டம், அப்போது இளம் தலைமுறை வீரர்களையும், வேறொரு மாற்றுக் கிரிக்கெட் கலாச்சாரத்தின் முன்னோடியாகவும் தோனியிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது.

 

அதில் முதல் போட்டி டி20 உலகக்கோப்பையாகும், அதாவது ஒரிஜினல் முதல் போட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக, ஆனால் அந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராகவே தோனியின் முதல் கேப்டன்சி முழு போட்டி என்ற அளவில் நடைபெற்றது. அந்தப் போட்டியும் இருதரப்பினரும் ஸ்கோர் அளவில் சமன் செய்த ‘டை’ ஆனது, முதலில் பேட் செய்த இந்திய அணி ராபின் உத்தப்பாவின் 50 ரன்கள், தோனியின் 33 ரன்களுடன் 141/9 என்று குறைவான ரன் எண்ணிக்கை கண்டது. பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக்கின் அதிரடி 53 ரன்களுடன் இதே 141 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது.

ஆனால் அது உலகக்கோப்பை என்பதால் அப்போது பவுல் அவுட் முறை வைத்திருந்தனர், அதில் இந்திய அணி வென்றது, தோனி தன் கேப்டன்சியில் முதல் போட்டியில் வெற்றி கண்டார், ஆனால் அது ஸ்கோர் அளவில் சமன் என்ற நிலையில் தோனி கேப்டன்சியின் முதல் போட்டியும் ரன்கள் அளவில் சமன், அவரது கடைசி கேப்டன்சி போட்டியும் அன்று ஆப்கானுக்கு எதிராக டை ஆகியுள்ளது. இந்தத் தற்செயல் சுவாரசியம் வேறு கேப்டன்களுக்கு நடந்திருக்குமா என்பது ஐயமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x