Published : 25 Sep 2018 05:28 PM
Last Updated : 25 Sep 2018 05:28 PM

தோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு: 696 நாட்களுக்குப் பின் அசத்தல்: டாஸ்வென்றது ஆப்கன்

696 நாட்களுக்குப் பின் எம்.எஸ். தோனி மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன்பொறுப்பு ஏற்றுள்ளார்.

துபாயில் ஆசியக்கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. சூப்பர்-4 சுற்றில் இன்று ஆப்கானிஸ்தான்அணியுடன் இந்திய அணி மோதுகிறது. லீக் ஆட்டங்களில் வென்று, சூப்பர்-4 சுற்றில்2 போட்டிகளில் வென்றுஇந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆதலால், இன்றைய போட்டிமுக்கியத்துவமில்லாத போட்டியாகவே கருதப்படுகிறது.

ஆதலால், இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவணுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. கேப்டன் பதவியை ராஜினாமா செய்து 696 நாட்களுக்குப் பின் மீண்டும் தோனி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்புடன் களத்தில் இறங்கியதுரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் இருந்தது.

அதுமட்டுமல்லாமல், தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் 200-வது போட்டியாகும். மேலும்இன்றைய போட்டியில் ரோகித் சர்மா, தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வுஅளிக்கப்பட்டது.

தோனி இதுவரை 199 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார். அதில் 110 போட்டிகளில்இந்திய அணி வெற்றியும், 74 தோல்விகளும் அடைந்துள்ளது. 4 போட்டி டை ஆகவும், 11 போட்டிகள் முடிவுஇல்லாமல் நின்றது. ஒட்டுமொத்தத்தில் தோனியின் கேப்டன்ஷிப்பில் வெற்றியின் வகிதம் 55.28 சதவீதமாகும்

அதற்குப்பதிலாக ராகுல், கலில் அகமது, மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல் ஆகியோருக்குவாய்ப்புஅளிக்கப்பட்டது. டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களாக ராயுடுவும், கே.எல்ராகுலும் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கலாம். தோனி 3-வது வீரராகவும், அதைத் தொடர்ந்து ஜாதவ், ஜடேஜாகளமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x