Published : 22 Sep 2018 04:47 PM
Last Updated : 22 Sep 2018 04:47 PM

ஆச்சரியகரமான திறமை கொண்ட ஆப்கான் ஆடுவதைப் பார்ப்பது என்ன பேறு- ஷாகித் அப்ரீடி மனப்பூர்வ பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடியே விதந்தோதி உளப்பூர்வமாகப் பாராட்டியுள்ளார்.

இமாம் உல் ஹக், பாபர் ஆசம் கூட்டணிக்கு பிறகு கடைசியில் ஷோயப் மாலிக் கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்தார்.

ஆனால் ஆப்கான் அணி பாகிஸ்தான் அணியை தண்ணி குடிக்க வைத்தது. முதலில் பேட்டிங்கில் தங்களது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை எட்டியது பிறகு தங்கள் முழு ஈடுபாட்டையும் காட்டி பாகிஸ்தானை வீழ்த்த ஆடியது, கடைசியில் பாகிஸ்தான் போராடித்தான் வெல்ல முடிந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரரான ஷாகித் அப்ரீடியே ஆப்கான் ஆட்டத்தைப் பார்ப்பது என்ன பேறு என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

இந்த வரபிரசாதத் திறமை கொண்ட ஆப்கான் அணியின் ஆட்டத்தைப் பார்ப்பது என்ன ஒரு பேறு. குறுகிய காலத்தில் பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட்கொள்ள வேண்டிய ஒரு சக்தி. கிரிக்கெட் உலகம் இவர்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் அப்ரீடி.

ஹர்ஷா போக்ளே கூறும்போது, “ஆப்கான் அணியிடமிருந்து கொஞ்சம் அனுபவமின்மை வெளிப்பட்டது. ஆனால் நன்றாக ஆடினர். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x