Last Updated : 22 Sep, 2018 09:57 AM

 

Published : 22 Sep 2018 09:57 AM
Last Updated : 22 Sep 2018 09:57 AM

பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அல்ல;ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும்: எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்- இந்திய அணிக்கு ராகுல் திராவிட் அறிவுரை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணி களுக்கு எதிராகவும் இந்திய அணி எச்சரிக்கையுடனே விளையாட வேண் டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இதுகுறித்தும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி செயல்பட்ட விதங்கள் தொடர்பாகவும் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு எளிதானது அல்ல. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தியா-இங்கிலாந்து தொடரில் இரு அணி பேட்ஸ் மேன்களும் பந்துகளை எதிர்கொள் வதில் தடுமாறினர்.

இந்த விஷயத்தில் விராட் கோலியை நீக்கிவிட்டு பார்த்தோம் என்றால், இரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் இது எளி தான தொடர் இல்லை என்பது தெரிய வரும். நான் இங்கிலாந்தில் சில காலம் விளையாடி இருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்கள் மிகவும் கடினமானவை. ரன் குவிப்பது சிரமமாக இருக்கும்.

அடுத்த முறை இங்கிலாந்து தொட ருக்கு நாம் செல்லும்போது, முன்ன தாகவே பயிற்சி பெற்று செல்லவேண்டும். இங்கிலாந்து தட்பவெப்ப நிலை, ஆடுகளங்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப தயாராவது அவசியமாகும். நம்மால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட முயல் வது அவசியமாகும். அந்தச் சூழ் நிலை கடினமாகத்தான் இருக்கும். அதை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்தத் தொடர் குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன சொன்னார் என்பதில் எனக்கு ஆர்வமில்லை. இந்தத் தொடர் மூலம் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியமாகும்.

இங்கிலாந்தில் நடைபெறும் தொடர் என்பது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். எனவே அந்தத் தொடரிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம். இந்தத் தொடர் அருமையானதாக இருந்தது. நமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தொடரை 1-4 என்று இழந்துவிட்டோம். நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம். சில டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி, இறுதி வரை வந்து வெற்றியைப் பறி கொடுத்தது. இதை வாய்ப்பை இழந்தோம் என்று தான் சொல்லவேண்டும். இருந்த போதும் இந்தத் தொடரில் சில சாதகமான அம்சங்கள் இருந்தன. நமது பந்து வீச்சு, பீல்டிங் இரண்டுமே அருமையாக அமைந்தது.

ஆசியக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நமது சிந்தனை எல்லாம் பாகிஸ்தான், வங்கதேசத்தை மட்டும் ஏன் நோக்கியிருக்கிறது என்று தெரியவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமல்லாமல் மற்ற அணிகளுடனும் எச்சரிக்கையாக விளையாடவேண்டும். வெள்ளைப் பந்துகளில் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வலிமை யானது என்றாலும், எச்சரிக்கையாக விளையாடுவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x