Published : 19 Sep 2018 07:29 PM
Last Updated : 19 Sep 2018 07:29 PM

பவுண்டரி அருகே மணீஷ் பாண்டேயின் பிரமிப்பூட்டும் சமயோசித கேட்ச்: சர்பராஸும் வெளியேற பாகிஸ்தான் திணறல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் சற்று முன் வரை 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து கடுமையாகத் திணறி வருகிறது.

29.3 ஒவர்கள் முடிந்த நிலையில் ஃபாஹிம் அஷ்ரப் இறங்கியுள்ளார். ஷதப் கான் 2 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்தியா தரப்பில் கேதார் ஜாதவ் மிக அருமையாக வீசி 4 ஓவர்கள் 1 மெய்டனுடன் 7 ரன்களுக்கு சர்பராஸ் அகமட், ஆசிப் அலி ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானின் சரிவுக்குக் காரணமானார்.

இந்நிலையில் இன்னிங்சின் 25வது ஓவரை கேதார் ஜாதவ் வீச சர்பராஸ் அகமட் ஒரு சிக்ஸ் அடிக்கலாம் என்று எண்ணி லாங் ஆனில் தூக்கி அடித்தார். பாண்டே வலது புறம் கொஞ்சம் ஓடி எல்லைக்கோட்டுக்கு அருகே இரு கைகளிலும் கேட்ச் எடுத்தார்.

ஆனால் சமநிலை குலைந்து கயிற்றைக் கடந்து விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை மைதானத்துக்குள் தூக்கிப் போட்டு பிறகு கோட்டுக்கு பின்னாலிலிருந்து மைதானத்துக்குள் வந்து கேட்ச் எடுத்தார், இப்படிப்பட்ட கேட்கள் இப்போதெல்லாம் டி20 போட்டிகளில் ஆங்காங்கே புதிய சகஜமான நிலையில் மணீஷ் பாண்டே இந்தக் கேட்சை சமயோசிதமாகப் பிடித்தது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக பாபர் ஆஸம் (47) விக்கெட்டை குல்தீப் யாதவ் அருமையான ராங் ஒன் மூலம் பவுல்டு முறையில் வீழ்த்த ஷோயப் மாலிக் (43) ராயுடுவின் ரன்னர் முனை நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

கடைசியாக அசிப் அலி 9 ரன்களில் ஜாதவ்வின் ஒன்றுமேயில்லாத பந்தை கட் ஷாட்டில் தோனியிடம் எட்ஜ் செய்து வெளியேறினார், தற்போது பாகிஸ்தான் 119/6 என்று ஆடி வருகிறது. இன்னும் 18 ஓவர்கள் மீதமுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x