Published : 19 Sep 2018 06:33 PM
Last Updated : 19 Sep 2018 06:33 PM

ஷோயப் மாலிக்கிற்கு கேட்சை விட்ட தோனி; பாண்டியா காயம்; ஸ்ட்ரெச்சரில் பெவிலியன் திரும்பினார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து மோசமான தொடக்கம் கண்டது, ஆனால் ஷோயப் மாலிக், பாபர் ஆஸம் தற்போது அணியை மீட்டுவருவதோடு ரன் விகிதத்தையும் மேம்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்னிங்சின் 16வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச அந்த ஓவரின் கடைசி பந்து ஷோயப் மாலிக் உடலுக்கு நெருக்கமாக வர அதை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார்.

ஆனால் பந்து எட்ஜ் ஆகி தோனிக்கு வலது புறம் கேட்ச் ஆகச் சென்றது வலது கையை நீட்டினார் தோனி பந்து ஒட்டியது ஆனால் டைவ் அடித்த தோனி பேலன்ஸ் செய்ய முயற்சி செய்த போது பந்து தரை தட்டியது.

மிகப்பெரிய வாய்ப்பு பறிபோனது. பாபர் ஆஸம் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தும் மாலிக் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர். இருவரும் சேர்ந்து இதுவரை 70 ரன்கள் சேர்த்துள்ளனர்.

பாகிஸ்தான் தற்போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. சற்று முன் பந்து வீசும்போது காலில் தசைப் பிடிப்புக் காரணமாகவா அல்லது முதுகு பிரச்சினையா என்று தெரியவில்லை ஆனால் கீழே விழுந்தார் ஹர்திக் பாண்டியா மேலும் வீச முடியாமல் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார்.

அவர் ஓவரில் மீதமிருந்த ஒரு பந்தை ராயுடு வீசி முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x