Published : 18 Sep 2018 09:51 AM
Last Updated : 18 Sep 2018 09:51 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் இன்று மோதுகிறது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான இன்றைய மோதல் சிறந்த பயிற்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஹாங்காங் அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒருதலை பட்சமாகவே அமைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹாங்காங் அணி 116 ரன்களில் சுருண்டிருந்தது. இதனால் வலிமை யான இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டமும் ஹாங்காங் அணிக்கு கடும் சோதனையாகவே இருக்கும். ஏதேனும் அதிசயம் நடைபெற்றால் மட்டுமே அவர் களால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான முன் னேற்றத்தை காண முடியும்.

இந்தத் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித் சர்மாவுடன் ஷிகர் தவண், கே.எல்.ராகுல்,கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, தோனி, ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ் வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந் திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட் டணி சவால் கொடுக்க தயாராக உள்ளது. உலகக் கோப்பை தொட ருக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும்.

மேலும் தோனியின் பேட்டிங் வரிசை இந்தத் தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். கேதார் ஜாதவ் அல்லது மணீஷ் பாண்டே 6-வது இடத்தில் களறமிங்கும் பட்சத்தில் தோனி 5-வது வீரராகவும், ஹர்திக் பாண்டியா 7-வது வீரராகவும் விளையாட வாய்ப்பு உள்ளது.கே.எல்.ராகுல் 3-வது வீரராகவும், அம்பதி ராயுடு 4-வது வீரராகவும் இடம் பெறக்கூடும். இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு பாகிஸ்தானின் முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோரைக் கொண்ட வேகக் கூட்டணி சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதில் ஹசன் அலியை தவிர மற்ற இருவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள். இத னால் இவர்களை சமாளிக்க இலங் கையைச் சேர்ந்த இடது கை ‘த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்களை’ கொண்டு இந்திய அணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வலைப்பயிற்சியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவும் அதிகளவில் பயன் படுத்தப்பட்டுள்ளார். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில் பும்ராவுடன் இணைந்து செயல்பட உள்ளார்.

இதேபோல் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் சிறிது கால இடைவேளைக்குப் பிறகு இணைந்து செயல்பட உள் ளது. இந்த சுழல் கூட்டணியை இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது இல்லை. இதனால் இவர்கள் நெருக்கடி கொடுக்கக் கூடும் என கருதப்படுகிறது. பாகிஸ் தான் அணியில் பேட்டிங்கில் பஹர் ஸமான், பாபர் அசாம், இமாம் உல் ஹக் ஆகியோர் நல்ல பார்மில் உள் ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த ஷோயிப் மாலிக் பலம் சேர்ப்பவராக உள்ளார்.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுவவேந்திர சாஹல், ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.

ஹாங்காங்: அன்சுமன் ரத் (கேப்டன்), அய்ஸாஸ் கான், பாபர் ஹயாத், கேமரான் மெக்அலுசன், கிறிஸ்டோபர் கார்டர், இஷன் கான், இஷன் நவாஸ், அர்ஷத் மொகமது, கின்சிட் ஷா, நதீம் அஹ் மத், மெக்கேனி, தன்வீர் அஹ்மத், தன்விர் அஃப்ஸல், வாக்காஸ் கான், அஃப்தாப் ஹூசைன்.நேரம்: மாலை 5

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x