Last Updated : 17 Sep, 2018 09:17 PM

 

Published : 17 Sep 2018 09:17 PM
Last Updated : 17 Sep 2018 09:17 PM

தோனியின் பேட்டிங் நிலை என்ன? - ரோஹித் சர்மா சூசகம்

நாளை ஹாங்காங் அணியுடன் இந்திய அணி ஆசியக் கோப்பை முதல் போட்டியில் களம் காண்கிறது. இதுவரை பாகிஸ்தான் ஹாங்காங்கையும் வங்கதேசம் இலங்கையையும் வீழ்த்தியுள்ளது. இன்று இலங்கை-ஆப்கான் அணிகள் விளையாடி வருகின்றன.

அதாவது 3, 4, 6-ம் இடங்களுக்கு பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அந்த இடங்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறியதை வைத்துப் பார்க்கும் போது தோனியின் நிலை 5ம் இடம் என்று ரோஹித் சர்மா சூசகமாகத் தெரிவிப்பதைக் காட்டியுள்ளது.

இந்நிலையில் பேட்டிங் வரிசை உள்ளிட்டவை பற்றி ரோஹித் சர்மா வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்திய பேட்டிங் வரிசையில் நம்பர் 3, 4, 6ம் இடங்களை வீரர்கள் பிடித்துக் கொள்ளலாம். கேதார், மணிஷ், ராயுடு அந்த இடங்களைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்தத் தொடரில் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறோம். குறிப்பாக இந்தத் தொடரில் பேட்டிங் வரிசை 4 மற்றும் 6ம் இடங்களில் இறங்கும் வீரர்களை நிரந்தர வீரர்களாக்க வேண்டிய தேவை உள்ளது.

ராயுடு, கேதார் ஜாதவ் அணியின் முக்கியமான வீரர்கல். இவர்கள் மீண்டும் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் இந்திய அணிக்கு போட்டிகளை வெற்றிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்,

பவுலர்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுப்பது பற்றி இப்போதைக்கு நான் சிந்திக்கவில்லை. பல்தரப்பட்ட மேட்ச் சூழ்நிலையில் தனிப்பட்ட பவுலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். அதே வேளையில் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கவும் விரும்புகிறோம்.

இதில் சீரான முறையில் நன்றாக வீசுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவோம். சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுக்கும் வீரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

நிறைய பேர் இங்கிலாந்திலிருந்து வருவதால் இங்கு இருக்கும் உஷ்ணம் பெரிய சவால்தான். இப்போது 4 நாட்களாக இங்கு இருக்கிறோம்.

ஆம் சூழல் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இப்போது ஆட்ட நேரம் அதில்தான் கவனம் செலுத்துவோம்.

இந்திய அணியின் கேப்டனாக பெரிய தொடரில் களமிறங்குகிறேன், எனக்கு உற்சாகமாகவும் உள்ளது பதற்றமாகவும் உள்ளது. எனக்கு அனைத்து வீரர்களிடமும் நல்ல பழக்கம் உள்ளது, நான் அவர்களைச் சரியாக புரிந்து கொள்கிறேன், இது அவசியமானது.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x