Published : 17 Sep 2018 07:47 AM
Last Updated : 17 Sep 2018 07:47 AM

எலும்பு முறிவுடன் தமிம் இக்பால் ஆடியது ஏன்?

ஆசியக் கோப்பை முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக பேட் செய்த போது பந்தில் கையில் அடிவாங்கி எலும்பு முறிவு போடப்பட்ட நிலையில் கடைசியில் முக்கிய கட்டத்தில் தமிம் இக்பால் இறங்கி ஒரு கையில் ஆடியதால் முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்களைக் கூடுதலாகச் சேர்த்தது வங்கதேச வெற்றியைத் தீர்மானித்தது.

இந்நிலையில் கையில் பேண்டேஜுடன் தான் ஏன் இறங்கினேன் என்பதை அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவுக்குத் தெரிவித்ததாவது:

“பவுலர் ஓடி வரும் போது அந்த 10 விநாடிகளி தைரியமாக அடைந்தேன். ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரம் என்னை உத்வேகமூட்டியது. நான் அவுட் ஆகியிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் நான் என் நாட்டுக்காகவும் அணிக்காகவும் கடமையாற்றுவதை லட்சியமாகக் கொண்டிருந்தேன்.

அடிபட்ட கை பின்னால்தான் இருந்தது, ஆனால் ஆடும்போது முன்னால் தானாகவே வந்தது, பந்தை விட்டிருந்தால் என் கையைப் பதம் பார்த்திருக்கும்.

மோர்டஸா என்னிடம் நான் இறங்க வேண்டுமென்று கூறிய போது அவர் ஜோக் அடிக்கிறார் என்றே நினைத்தேன். கடைசி ஓவராக இருந்தால் நான் களமிறக்கப்படலாம் என்ற திட்டமிருந்தது. நான் ஸ்ட்ரைக்கில் இல்லாமல் ஸ்டாண்ட் கொடுத்திருப்பேன்.

ரூபல் ஹுசைன் கிரீசில் இருந்த போது நான் கால்காப்பைக்கட்டி தயாரானேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கு கிளவ்வை ஒருவர் மாட்டி விட இன்னொருவர் அப்டமன் கார்டை மாட்டிவிட்டார். மொமினுல் ஹக் என் கால்காப்புகளைக் கட்டிவிட்டார்.

முஸ்தபிசுர் அவுட் ஆனவுடன் எனக்கு 2வது எண்ணம் இல்லை, களமிறங்கினேன். இறங்கும் போது கூட முடியுமா? என்றனர் நான் முடியும் என்று உறுதியாகக் கூறியே இறங்கினேன்.

அந்த ஒரு பந்தில் அவுட் ஆகாமல் அடிபடாமல் தப்பித்தால் அடுத்த ஓவரில் முஷ்பிகுர் அடிக்கும் 5-10 ரன்கள் அணிக்கு உதவலாம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் நான் அந்த ஒரு பந்தை ஆடுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 32 ரன்கள் எதிர்முனையில் வந்தது. முஷ்பிகுர் அசாதாரணமாக ஆடினார்.

இவ்வாறு கூறினார் தமிம் இக்பால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x