Last Updated : 16 Sep, 2018 01:56 PM

 

Published : 16 Sep 2018 01:56 PM
Last Updated : 16 Sep 2018 01:56 PM

‘முறிந்த கை, துணிச்சலான இதயம்’ - ஒரு கையால் பேட் செய்த தமிமை பாராட்டிய கேப்டன் மோர்தசா

இலங்கை அணிக்கு எதிரான ஆசியக்கோப்பைப் போட்டியில், கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும், அணிக்காகக் களமிறங்கி ஒரு கையால் பேட் செய்த வங்கதேச வீரர் தமிம் இக்பாலுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் வங்கதேச அணி வீரர் தமிம் இக்பால் பேட் செய்த போது பந்து கையில் பட்டு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து அவரால் பேட் செய்ய இயலவில்லை.

இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவர் களத்தில்இருந்து வெளியேறினார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் அவரின் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு கட்டுபோடப்பட்டது.

ஆனால், அணியின் ஸ்கோரைப் பார்த்த தமிம் இக்பால் 9-வது விக்கெட்டுக்க காயத்தையும் பொருட்படுத்தாமல், முஷ்பிகுர் ரஹிமிக்கு துணையாகக் களமிறங்கினார். தனது கையில் போடப்பட்டிருந்த கட்டை கழற்றிவிட்டு, ஒரு கையால் பேட் செய்து அனைவரையும் அசத்தினால், கடைசி நேரத்தில் தமிம் களமிறங்கி முஷ்பிகுருக்கு உதவியாக பேட்செய்ததால், கூடுதலாக 31 ரன்கள் வங்கதேசம் அணிக்குக் கிடைத்தது.

இது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறுகையில், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை நாங்கள் இழந்துவிட்டதால், அதிகமான நெருக்கடிக்கு ஆளாகினோம். இதில் தமிம் காயம் காரணமாக பேட் செய்யவில்லை. அதன்பின் ரஹிம், மிதுன் பேட்டிங் அணிக்கு பக்கபலமாகஅமைந்தது. கடைசி நேரத்தில் காயத்தையும் பொருட்படுத்தாமல், தமிம் களமிறங்கி ஒரு கையால் பேட் செய்தது துணிச்சலைக் காட்டுகிறது. உடைந்த கையாக இருந்தாலும், உடையாத துணிச்சல் இதயத்தோடு களமிறங்கினார். யாரும் தமிமை பேட்டிங் செய்யக்கூறவில்லை, ஆனால், அணிக்காக அவர் அர்ப்பணிப்புடன் களமிறங்கினார்.

முஷ்பிகுரின் பேட்டிங் இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக இருந்தது, அவரின் சதத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. போட்டியின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தது உத்வேகம் அளிப்பதாக இருந்தது. ஆசியக் கோப்பையை நல்ல முறையில் தொடங்கி உள்ளோம். மிர்பூர் நகரில் உள்ள அரங்கைக்காட்டிலும் இங்கு அரங்கு பெரிதாக இருக்கிறது, ரசிகர்களும் நிறைந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தமிம் இக்பால் விரைவில் வங்கதேசம் செல்ல உள்ளார். அவருக்கு பதிலாக அணியில் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான செப்டம்பர் 20-ம் தேதி போட்டியில் ஷான்டோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில்இருக்கும் ஷான்டோ முழுயாக அணிக்கு திரும்பாவாரா என்பதுசந்தேகமே.

இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸும் வங்கதேச வீரர் தமிமை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், மலிங்கா சிறப்பாகப் பந்து வீசினார், தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதன்பின் பந்துவீச்சில் மந்தம் காணப்பட்டது. 262 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். இந்த போட்டியில் செய்த தவற்றில் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டோம். அடுத்து வரும்போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

வங்கதேச வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள், பேட்டிங்கும் செய்தனர். தமிம் இக்பால் காயத்தை பொருட்படுத்தாமல் கடைசிநேரத்தில் பேட் செய்தது சிறப்பு எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x