Published : 06 Sep 2018 07:25 PM
Last Updated : 06 Sep 2018 07:25 PM

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: யுஏஇ அணியை வீழ்த்தி ஹாங்காங் அணி தகுதி

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15-ம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடருக்கு தகுதிச் சுற்று மூலம் ஹாங்காங் அணி வாய்ப்புப் பெற்றுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த தகுதிச் சுற்று இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்த வாய்ப்பை ஹாங்காங் அணி பெற்றது.

ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இதில் 6-வது அணியாக தகுதிச்சுற்று மூலம் ஒரு அணி தேர்வு செய்யப்படும்.

அந்த வகையில் தகுதிச்சுற்றுக்கான இறுதிப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இன்றுநடந்தது. இதில் ஹாங்காங் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. மழை காரணமாக ஓவர்கள் 24 ஆகக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த ஐக்கிய அமீரக அணி 24 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அந்தஅணியில் அதிகபட்சமாக ஆஷப் அகமது 79 ரன்கள்சேர்த்தார். ஹாங்காங் அணித் தரப்பில் ஆஜஸ்தான் 5 விக்கெட்டுகளையும், நதீம் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 23.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகம் அணிதான் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாங்காங் அணி தகுதி பெற்று ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 16-ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ஹாங்காங்அணி. இந்திய அணியுடன் 18-ம் தேதி ஹாங்காங் மோதுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x