Published : 03 Sep 2018 11:27 AM
Last Updated : 03 Sep 2018 11:27 AM

2 ஆண்டுகளில் 8 டெஸ்ட் விரட்டல்களில் 5 தோல்விகள்: வங்கதேசத்தை விடவும் இந்திய அணி மோசம்- எப்படி?

இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளில் குறைந்த வெற்றி இலக்குகளைக் கூட விரட்ட முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இதில் வெற்றி இலக்கை நோக்கிய 8 விரட்டல்களில் 5-ல் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி.

4வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரி இந்திய அணிக்கு மிகக்குறைவான 18.68தான் உள்ளது, இந்த விஷயத்தில் மற்ற டெஸ்ட் அணிகளை விட ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரியில் இந்திய அணி கடைசி நிலையில் உள்ளது.

அதாவது 4வது இன்னிங்சில் வங்கதேசம் கூட விக்கெட் ஒன்றுக்கான ரன் சராசரி 19.42 வைத்துள்ளது. இதில் இலங்கை அணிதான் 30.42 என்ற சராசரியில் முதலிடம் வகிக்கிறது, 2வது இடத்தில் 30.35 என்ற சராசரியுடன் மே.இ.தீவுகள் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 21.00, இங்கிலாந்து 21.80, பாகிஸ்தான் 23.60, ஆஸ்திரேலியா 23.75, ஜிம்பாப்வே 24.50. நியூஸிலாந்து 29.04,

ஆகவே மற்ற அணிகளை விட டெஸ்ட் 4வது இன்னிங்சில் இந்திய அணியின் சராசரி மற்ற மோசமான அணிகளை விடவும் மோசமாக உள்ளது.

மேலும் 2 ஆண்டுகளில் 8 விரட்டல்களில் 5-ல் தோல்வி அடைந்தது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 194 ரன்களை எடுக்க முடியாமல் தோல்வி, 208 ரன்களை விரட்டும் போது கேப்டவுனில் 72 ரன்களில் தோல்வி என்று குறைந்த இலக்குகளை விரட்ட முடியாமல் தோல்வி அடைந்து வருகிறது இந்திய அணி.

இந்திய அணியின் டாப் 3 வீரர்களின் 4வது இன்னிங்ஸ் சராசரி இந்த ஆண்டில் 9.91

டெஸ்ட் 4வது இன்னிங்ஸ்களைப் பார்த்தால் கடைசி 12 இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் டாப் 3 எடுத்த ரன்கள் 119 மட்டுமே. ஒருவரும் 20-ஐத் தாண்டவில்லை.

4வது இன்னிங்சில் மட்டும் மொயின் அலியின் விக்கெட்டுகள் எண்ணிக்கை 43.

2011-க்குப் பிறகு துணைக்கண்டத்துக்கு வெளியே இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று தோல்வி அடைகிறது.

சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுலில் 2 டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

8ம் நிலையில் இறங்கி சாம் கரன் இந்தத் தொடரில் 251 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் டேனியல் வெட்டோரிதான் இதேடவுனில் ஒரு தொடரில் 220 ரன்கள் எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x