Published : 24 Aug 2018 12:55 PM
Last Updated : 24 Aug 2018 12:55 PM

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் போபண்ணா -ஷரன் இணை தங்கப் பதக்கம் வென்றது.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில், இந்தியாவின் போபண்ணா - ஷரன் இணை  கஜகஸ்தான் இணையான பப்லில் - டெனிஸ் இணையை 6 - 3, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

இதன் மூலம் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை, 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x