Published : 22 Aug 2018 07:25 PM
Last Updated : 22 Aug 2018 07:25 PM

பொதுவாக கோலிக்கு நன்றாகவே வீசுகிறோம், அவரால் விரைவில் ரன்கள் எடுக்க முடியவில்லை: தோல்வி கேப்டன் ஜோ ரூட் பேட்டி

ட்ரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தோல்வி ஏமாற்றத்துடன் பேட்டியளித்துள்ளார்.

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

இது வலுவான அணி, டாஸில் எப்போதுமே முடிவுகள் எடுப்பது கடினம். பிட்சில் உயிருள்ள புற்கள் இருந்தன. பந்து வீச்சிலும் சிறப்பாகவே ஆடிவந்துள்ளோம். இதைக் கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தேன், ஆனால் இந்திய அணியை விரைவில் முடித்திருக்க வேண்டும்.

நாங்கள் இன்னும் கொஞ்சம் ஃபுல் லெந்தில் வீசியிருக்கலாம். ஆனால் இந்தியா மிக நன்றாக பேட் செய்தனர். குறிப்பாக முதல் நாளில். முதல் இன்னிங்ஸில் நாங்கள் எங்கல் திறமைக்கேற்ப ஆடவில்லை என்று கூறுவது சரியானதுதான்.

2வது இன்னிங்சில் பட்லர்-ஸ்டோக்ஸ் கூட்டணி எங்களுக்கெல்லாம் சரியான் பாடம். எப்படி ரன்கள் எடுக்கப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு நல்ல தெளிவு இருந்தது.

முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுப்பதற்கு என்ன தேவை என்பதை நாங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆம் கேட்ச்கள் மிக முக்கியம். கேட்ச்களை விடாமல் பிடிப்பதில் சீரியசாகப் பணியாற்றுகிறோம், அது எங்களுக்கு மிகமுக்கியமாகும். இதுவரை அது கைகொடுக்கவில்லை, அது கைகொடுக்கத் தொடங்கி விட்டால் அது பெரிய அளவில் நமக்கு பலன்களை அளிக்கும்.

இரு அணிகளின் டாப் ஆர்டருக்குமே இங்கு சவாலான சூழ்நிலைதான் இருந்தது. பட்லரைப் பொறுத்தவரை சிறந்தது அவர் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடிக்க முடிகிறது. ஆனால் அவர் சூழ்நிலைக்கேற்ப தன் ஆட்டத்தை வடிவமைப்பதுதான் அவரிடம் பிடித்தது. இது அவருக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும்.

இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.

விராட் கோலிக்கு பொதுவாகவே நன்றாகத்தான் வீசுகிறோம், எங்களுக்கு எதிராக அவரால் விரைவு கதியில் ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் ரன்கள் எடுக்கும் வழியை கண்டுபிடித்துக் கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x