Last Updated : 22 Aug, 2018 05:40 PM

 

Published : 22 Aug 2018 05:40 PM
Last Updated : 22 Aug 2018 05:40 PM

ஆசியப் போட்டிகள் 2018: வரலாறு படைத்தார் இந்திய ‘தங்க’ வீராங்கனை ரஹி சர்னோபத்

 இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 25மீ ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத்.

25மீ ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் நபஸ்வான் யாங்பைபூன் என்பவரை வீழ்த்தினார். இருவரும் 34 புள்ளிகளில் சமனில் இருந்த போது ஆட்டம் மிகவும் பரபரபான கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து ஷூட் ஆஃப் கட்டத்தின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது, இருவருமே தலா 4 முறை இலக்கைச் சரியாகச் சுட்டனர். இதனையடுத்து இன்னொரு ஷூட் ஆஃப்புக்குச் சென்றது ஆட்டம். இதில் ராஹி 3 முறை இலக்கை சரியாக குறிவைத்துச் சுட, தாய்லாந்து வீராங்கனை 2 முறையே சரியாகச் சுட்டார்.

இதனையடுத்து துப்பாக்கிச் சுடுதலில் ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்றை நிகழ்த்தினார் ரஹி சர்னோபத், இவர் கோலாப்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் வெண்கலம் வென்ற வீராங்கனை தென் கொரியாவின் கிம் மின்ஜங் ஆவார்.

இறுதிப் போட்டியில் ரஹி முன்னிலையில் இருந்தார். முதல் 10 ஷூட்டுமே இலக்கை அருமையாக தடம் பிடித்தது. 6-வது சீரிஸில் 5 ஷாட்களையும் இலக்கு தவறாமல் சுட்டார். கடைசியில் இவர் பரபரபான ஆட்டத்தில் பதற்றமடையாமல் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்தார்.

நேற்று 10மீ பிஸ்டல் பிரிவில் 16 வயது வீரர் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இவருடன் சரிசமமாக இறுதிச் சுற்றுக்கு வந்த மற்றொரு திறமை வாய்ந்த வீராங்கனை மனுபாக்கர் 6வதாக முடிந்தார்.

2013-ல் இதே ரஹி சர்னோபத் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியவர். இவருக்கு கடந்த ஆண்டு பயங்கர முழங்கை காயம் ஏற்பட்டது அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தங்கச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x