Published : 17 Aug 2018 05:19 PM
Last Updated : 17 Aug 2018 05:19 PM

10 ஆண்டுகள் தடை: அதிரடி தீர்ப்பினால் பாக்.வீரர் நசீர் ஜாம்ஷெட்டின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் சூதாட்டப்புகாரில் சிக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக விசாரணையில் அம்பலமானதால் அவர் விளையாட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனித்த ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டதையடுத்து நிரூபணமானதால் நசீர் ஜாம்ஷெட் 10 ஆண்டுகளுக்கு எந்த வித கிரிக்கெட்டையும் ஆட தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நிர்வாக அளவிலும் இவர் இனி ஆயுளுக்கும் எந்தப் பொறுப்பும் வகிக்க முடியாது.

இது நசீர் ஜாம்ஷெட்டுக்கு வழங்கப்படும் 2வது தண்டனையாகும். முதலில் 2017-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஸ்பாட் பிக்சிங் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததையடுத்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டார். பிப்ரவரி 2017-ல் இவர் பிரிட்டனில் கைதும் செய்யப்பட்டார்.

முதல் தடை நீங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் ஊழல் தடுப்பு விதிமுறைகளின் 7 பிரிவுகளை அவர் மீறியதாக விசாரணையில் அம்பலமானது.

ஜாம்ஷெட் பல கிரிக்கெட் புகார்களில் மையக்கண்ணியாகச் செயல்பட்டுள்ளார். பிற வீர்ர்களையும் சூதாட்டத்திற்குள் இழுத்துள்ளார்.

ஜாம்ஷெட்டுக்கும் மற்றவர்களுக்கும் நடந்த வாட்ஸ் ஆப் சாட்டில் இவரது குரல் அடையாளம் காணப்பட்டது.

2017 பாகிஸ்தான் சூப்பர் லீகை உலுக்கிய ஸ்பாட் பிக்சிங் வழக்கில் தண்டிக்கப்படும் 6வது வீரராகிறார் ஜாம்ஷெட். முன்னதாக ஷர்ஜீல் கான், காலித் லத்தீப், மொகமது நவாஸ், மொகமது இர்ஃபான், ஷஹ்சைப் ஹசன் ஆகியோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர், ஜாம்ஷெட் கடைசியாக பாகிஸ்தானுக்காக 2015 உலகக்கோப்பையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x