Published : 17 Aug 2018 09:03 AM
Last Updated : 17 Aug 2018 09:03 AM

ஆசிய போட்டிக்கு பயஸ் வருவாரா?: விடை தெரியாத இந்திய கேப்டன் ஜீஷான்

18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நாளை தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் 540 பேர் உள்ளடக்கிய அணி கலந்து கொள்கிறது.

இந்தத் தொடரில் இந்திய டென் னிஸ் அணியில் ஆடவர் ஒற்றையர் பிவில் ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஷ்வரன், சுமித் நகால், இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா, கர்மமான் கவுர், தாண்டி, ருட்டுஜா போஸ்லே, பிரஞ் சாலா, ரியா பாட்டியா, பிரார்த்னா தாம்ப்ரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் யுகி பாம்ப்ரி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற் றுள்ளதால் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய விளை யாட்டில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணியின் ஒரு பிரிவினர் நேற்று பாலேம்பங் நகரை சென்றடைந்தனர். ஆனால் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் வரவில்லை. டென்னிஸ் போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் முக்கிய வீரரான பயஸ் இதுவரை வந்து சேராதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆடவர் பிரிவு பயிற்சியாளர் ஜீஷான் கூறுகை யில், லியாண்டர் பயஸ் எப்போது இங்கு வருவார் என்பது தெரியாது. அவர்தான் அதை தெரிவிக்க வேண்டும். நான் கடைசியாக அவரிடம் பேசியபோது, தான் சின்சினாட்டி தொடரில் விளை யாடுவதாகவும் அதன் பிறகு பாலேம்பங் நகருக்கு வருவதாக வும் கூறினார். ஆனால் அவர், சின்சினாட்டி தொடரில் விளையாட வில்லை” என்றார்.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 45 வயதான லியாண் டர் பயஸ் இம்முறை இரட்டையர் பிரிவில் எந்த வீரருடன் இணைந்து விளையாடுவார் என்பது இது வரை முடிவு செய்யப்படாத நிலை யிலேயே உள்ளது. மாறாக ரோகன் போபண்ணா, திவிஜ் சரணுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5 தங்கப் பதக்கம் வென்றுள்ள பயஸ் கடைசியாக 2006-ம் ஆண்டு தொடரில் விளையாடியிருந்தார். இம்முறை அவர் அனுபவம் இல்லாத சுமித் நாகல் அல்லது ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரரான ராம்குமார் ராமநாதன் ஆகியோரு டன் களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தோள்பட்டை காயத்தில் இருந்து ரோகன் போபண்ணா குணமடைந்துள்ளது இந்திய அணிக்கு சிறப்பான செய்தி யாக அமைந்துள்ளது. அதே வேளையில் உடற் தகுதி மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்குப் பிறகு போதியளவு பயிற்சி இல்லாதது ஆகியவை போபண்ணாவின் திறனை பாதிக் கக்கூடும் என கருதப்படுகிறது. இது குறித்து போபண்ணா கூறு கையில், இது எப்போதுமே பிரச்சினையாக இருந்தது இல்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து நான் விளையாடுவது இது முதன் முறையும் கிடையாது. 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் நிச்சயம் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்” என்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் முன்னணி வீரர்களான ஜப்பானின் நிஷிகோரி, தென் கொரியாவின் ஹையோன் சுங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் தரவரிசையில் 100-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமின் மட்டுமே வலுவான போட்டியாளராக இருக் கக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஆனால் அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர் தாண்டி ஆகியோருக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. ஏனெனில் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சீனாவின் கியாங் வாங் மற்றும் ஷூய் ஜாங் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். 2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தலா ஒரு தங்கம், வெள்ளி ஆகியவற்றுடன் 3 வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x